அரசியலமைப்பின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் ஒரு பார்வை!காஷ்மீர்
https://youtu.be/DXEGOH0p75wகாஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் 370(1)ஐ அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ஆணை தேசத்தை அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. காஷ்மீரில் இப்படியாக ஆதிக்கம் செலுத்த மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறதா என்கிற வாதம் ஒருபக்கம் எழுந்திருக்கும் அதேசமயம் இதேபோன்று வேறு சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட மாநிலங்களும் தங்களுடைய மாநில உரிமைகள் குறித்தான மீள் பரிசீலனையில் ஈடுபட்டு வருகின்றன. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அதே வேளையில் "நாகாலாந்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது 371(A) சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது" என அதன் ஆளுநர் ரவி அந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நாகாலாந்து மட்டுமல்ல, மகாராஷ்ட்ரா, குஜராத், கோவா உட்பட 10 மாநிலங்களுக்கு இதுபோல சிறப்பு அந்தஸ்துகள் தரப்பட்டுள்ளன. பிரிவு 371(A) இது நாகாலாந்து மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் சிறப்புப் பிரிவு. இதன்படி இந்திய நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாகா மக்களின் பாராம்பர்ய சட்ட விதிமுறைகளுக்கும், அவர்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கும், அவர்களது மதம் மற்றும் சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் பொருந்தாது. மத்திய அரசின் சட்டங்கள் அந்த மாநிலத்தில் அமலாக்கப்பட வேண்டிய தேவை இருந்தால் அதன் சட்டமன்றத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்று மிசோரத்துக்கான 371(G) பொருந்தும். பிரிவு 371 மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறப்புப் பிரிவின்படி அதன் மாநில ஆளுநர்களுக்கு விதர்பா, மராத்வாடா மற்றும் கட்ச் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் சரிசமமான வளர்ச்சியற்ற பகுதிகளில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க உரிமை அளிக்கப்படும். இதுபோன்றதொரு சிறப்புப் பிரிவு ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பின் தங்கிய ஆறு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது (பிரிவு 371] பிரிவு 371(B) அஸ்ஸாம் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் அளித்தும் அதன் பழங்குடிகளுக்கு அந்த மாநில சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டு உரிமை அளித்தும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துஇது போன்றதே மணிப்பூர் மாநிலத்துக்கான அந்தஸ்து பிரிவு 371(C) பிரிவு 371 (D&E) 1974 இயற்றப்பட்ட இந்தச் சட்டப்பிரிவு ஆந்திர மாநிலத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கான சிறப்புரிமையையும் அதன் பாதுகாப்பையும் நிலை நாட்டுகிறது. பிரிவு 371(F) சிக்கிம் மக்களின் வெவ்வேறு பிரிவினரின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அந்த மாநிலச் சட்டப்பேரவையில் 30-க்கும் குறைவான உறுப்பினர்கள் இடம்பெறக் கூடாது என்பதற்கான சிறப்பு அந்தஸ்து ஆணை. இதே போன்று பிரிவு 3711 கோவாவிலும், பிரிவு 371H அருணாசலப் பிரதேசத்திலும் அமலில் இருக்கிறது. இந்தப் பிரிவுகளின்படி மாநிலச் சட்டங்களின் மீது ஆளுநருக்கான சிறப்பு அதிகாரமும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர தேசத்தின் ஒட்டுமொத்த பழங்குடிகளுக்கான சுயாட்சி அதிகாரம் அளிக்கும் பிரிவு 2441) ம் அமலில் இருக்கிறது. அதன்படி ஜனாதிபதி தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வரையிலான பகுதிகளைப் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக (Scheduled Areas) அறிவிக்கலாம். அதனது நிர்வாகம் ஐந்தாவது அட்டவணையின் கீழ் இடம்பெறும். இந்த அதிகாரம் ஆளுநருக்கும் உண்டு. இதுவரையில் ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், இமாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா , ராஜஸ்தான், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் ஐந்தாவது அட்டவணையில் இடம்பெற்ற பழங்குடியினப் பகுதிகள் உள்ளன. இந்தச் சட்டப்பிரிவுகளும், இவை சார்ந்த அந்தந்த மாநில மக்களுக்கான உரிமைகளும் எதிர்காலத்தில் இதே நிலையில் பாதுகாக்கப்படுமா அல்லது ஏதாவது. காரணங்களுக்காக நீக்கப்படுமா என்ற விவாதமும் கிளம்பியிருக்கிறது. இதற்கான விடை ஆட்சியாளர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.