ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து நாள் முழுவதும் அமைதிகாத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதியில் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

இந்த தேசம் மக்களால் உருவானது என்றும் நிலத்தாலோ கட்டத்தாலோ அல்ல என தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா அவையில் ஜம்மு காஷ்மீர் குறித்து முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசன பிரிவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அத்தோடு 35ஏ பிரிவும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.இதை கேட்டு ராஜ்யசபாவில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிக ஆவேசமாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அத்துடன் மத்திய அரசு செய்திருப்பது வரலாற்று பிழை என கடுமையாககூச்சலிட்டனர். இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என நேற்று ப சிதம்பரம் தெரிவித்தார். குலாம் நபி ஆசாத், இந்தியாவின் தலையை வெட்டிவிட்டார்கள் என கடுமையாக பேசினார். காஷ்மீர் விவகாரம்... சீனா, முஸ்லிம் நாடுகள் கனத்த மவுனம்... தன்னந்தனியே போராடும் பாக். ஆனால் நேற்று ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து நாள் முழுவதும் அமைதி காத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது மௌனத்தை கலைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சிறையில் அடைத்து அரசியல் அமைப்பை மீறி, ஜம்மு காஷ்மீரை ஒரு தலைபட்சமாக பிரிப்பதன் மூலம் தேசத்தின் ஒருங்கிணைப்பு அதிகரிக்காது, இந்த தேசம் மக்களால் ஆனது... வெறும் நிலங்களாலோ அல்லது கட்டிடங்களாலோ அல்ல. அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால் தேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் தாக்கத்தை விளைவிக்கும்" என கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்