நிதியமைச்சர் நடக்க இருக்கும் சந்திப்பில், பல பிரச்னைகளை சமாளிப்பது குறித்து, முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்

புதுடில்லி:மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை, நிதியமைச்சர்முக்கியமான சில முடிவுகள் பல பிரச்னைகளை சமாளிப்பது குறித்து, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் சந்தித்துப் பேச உள்ளார்.இந்த சந்திப்பில், வாகனத் துறை, வீட்டுவசதித் துறை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ஆகியவற்றுக்கு கடன் வழங்குவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.பொதுவாக, நிதியமைச்சர், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் மறு ஆய்வு கூட்டத்தை நடத்துவார். ஆனால், இந்த முறை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், முக்கிய துறைகளில், கடன் வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிகிறது. அதாவது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வாகனத் துறை, வீட்டுவசதித் துறை, சில்லரை விற்பனை துறை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் வளர்ச்சி குறித்து அலசப்படும். மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதற்காக, வங்கி துறையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.இது குறித்து, நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள். ஆனால், இம்முறை தனியார் வங்கி தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, இம்முறை, வருவாய் துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை ஆகியவற்றின் செயலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.மேலும், நிதியமைச்சர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான, யு.கே.சின்ஹா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, பிற அமைச்சகங்களின் பிரதிநிதிகளுடன், ஒரு கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.யு.கே.சின்ஹா குழு, கடந்த ஜூன் மாதத்தில், தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.கடன், பங்கு நிதி, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பணம் செலுத்துவதில் உள்ள தாமதங்கள், நிறுவன ஏற்பாடுகள், சட்ட மாற்றங்கள், கிராமப்புற நிறுவனங்கள், இடர் குறைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்தான பரிந்துரைகளை, சின்ஹா குழு வழங்கி உள்ளது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், அவற்றுக்காக, அரசு, தனியே நிதியை ஏற்படுத்தவேண்டும் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த செயல்படுத்துவதற்கு, ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்களின் பிரதிநிதிகளை, நிதியமைச்சர் சந்திக்க இருக்கிறார்.இந்த சந்திப்புகள் ஒருபுறமிருக்க, அவசர பொருளாதார பிரச்சினைகள் குறித்தும், பட்ஜெட் அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்தும், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளின் செயலர்களுடன், தினமும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார், நிதியமைச்சர்.நாளை நடக்க இருக்கும் சந்திப்பில்பல பிரச்னைகளை சமாளிப்பது குறித்து, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்