முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் சி.பி.ஐ அதிகாரிகள் வருகை.


 


டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக எம்பி கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.என்ன கணிப்புஇதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஏற்கனவே சிபிஐக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.ஜாமீன்இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.ஜாமீன் இல்ல இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார். அதன் பின் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.ஆள் இல்லை இதனால் அதிரடி திருப்பமாக தற்போது ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டில் குவிக்கப்பட்டனர். ப.சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் சிபிஐ குவிக்கப்ட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ஐந்து நிமிடத்தில் திரும்பி சென்றனர். ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஆனால் ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 3-வது முறையாக வந்தனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்