அவரது சட்டைப்பையிலிருந்து 100 ரூபாய் நோட்டு பறந்து கீழே விழுந்துவிட்டதாக இருவரும் நூதன முறையில் முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் கொள்ளை

சென்னை மாதவரம் அருகே நூதன முறையில் முதியவரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மாதவரம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு, அவர் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனத்திலிருந்து வரவேண்டிய செட்டில்மெண்ட் தொகை சமீபத்தில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புழல் கேம்ப் அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு சென்ற சீனிவாசன், தனது கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இளைஞர்கள் இருவர் அவரை பின்தொடர்ந்தாக கூறப்படுகிறது. புழல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்ச் அருகே சென்று கொண்டிருந்த சீனிவாசனிடம், அவரது சட்டைப்பையிலிருந்து 100 ரூபாய் நோட்டு பறந்து கீழே விழுந்துவிட்டதாக இருவரும் கூறியதாக தெரிகிறது. அதனை நம்பிய சீனிவாசன் டேங்க் கவரில் பணமிருந்ததையும் மறந்து வண்டியை நிறுத்தி விட்டு 100 ரூபாயை எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டேங்க் கவரிலிருந்த பணத்தை இளைஞர்கள் இருவரும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 100 ரூபாய் கிடைக்காததால் திரும்பி வந்த சீனிவாசன் வண்டியிலிருந்த பணமும் காணாமல் போயிருப்பதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருகிலிருந்த பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிக் கேமராவில் பதிவாகியுள்ள இளைஞர்களின் படத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளானர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்