இதற்கு முன் இல்லாத அளவு பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டு உள்ளது - நிதி ஆயோக் துணைத் தலைவர்

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது:- கடந்த 70 ஆண்டுகளில் (நாங்கள்) இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பிரச்சினை நிதித்துறையில் உள்ளது என்பதை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது. பணப்புழக்கம் நொடித்துப் போகிறது. எனவே நீங்கள் அதை சரி செய்ய வேண்டும், யாரும் யாரையும் நம்பவில்லை. இது அரசாங்க துறையில் மட்டுமல்ல, தனியார் துறைக்குள்ளும், வேறு யாருக்கும் கடன் கொடுக்க விரும்பவில்லை. இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் சாதாரணமாக இல்லாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி-மார்ச் காலத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. குறைந்த நுகர்வு, பலவீனமான முதலீடுகள் மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட சேவைத்துறை காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேலும் 5.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)