சான்றிதழ் கொடுக்க ரூ.14,000 லஞ்சம்! - கைதுசெய்யப்பட்ட வட்டாட்சியர்

சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், தற்காலிகப் பணியாளர் ஆகியோர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ முஷ்ணத்தில், சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ஆகியோரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கம்யூனிசா. இவரின் கணவர் மாபூஷா இறந்துவிட்டதால், ஸ்ரீ முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ 14 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். கம்யூனிசா, இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று மாலை கடலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி நெல்வின்ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம் உட்பட, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஸ்ரீ முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது, கம்பூனிசா லஞ்சப் பணத்தை வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், தற்காலிகப் பணியாளர் உத்திரவன்னியன் ஆகியோரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஓழிப்புப் போலீஸார் மூன்று பேரையும் கைதுசெய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்