லஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா...! ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...!

எங்கு பார்த்தாலும் படிப்பு.. படிப்பு.. படிப்பு.. என்றாகிவிட்டது, எந்த திசையில் திரும்பினாலும் என் மகன் என்ஜினியர், என் மகள் என்ஜினியரிங் என்று சொல்லி வருகின்றனர். அந்தளவிற்கு நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது, அதிகம் படித்து விட்டனர். ஆனால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள்தான் இல்லை. படித்தவர்கள் அதிகமாகிவிட்டதால் வேலையும் கிடைக்க வில்லை... படித்த எல்லோருக்கும் வேலை அரசு வேலை கொடுப்பது சாத்திய மில்லாதது எல்லோரும் படித்துவிட்டதால்தான் இப்போது யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அறிவித்த மக்கள் குறை தீர்ப்பு முகாம் திண்டுக்கல் செட்டி நாயக்கன் பட்டியில் இன்று நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மக்களுக்கு நல திட்ட உதவிகளைவழங்கி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். அந்த காலத்திலெல்லாம் பத்தாவது படித்தாலே பெரிய படிப்பு என்று கூறுவார்கள், அதை கூட எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளின் என் மகள் பத்தாவது படித்துள்ளார் என்று பெரிய சாதனையாக சொல்வார்கள். ஆனால் அப்போது எங்கு பார்த்தாலும் படிப்பு.. படிப்பு.. படிப்பு.. என்றாகிவிட்டது, எந்த திசையில் திரும்பினாலும் என் மகன் என்ஜினியர், என் மகள் என்ஜினியரிங் என்று சொல்லி வருகின்றனர். அந்தளவிற்கு நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது, அதிகம் படித்து விட்டனர். ஆனால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள்தான் இல்லை. படித்தவர்கள் அதிகமாகிவிட்டதால் வேலையும் கிடைக்க வில்லை... படித்த எல்லோருக்கும் வேலை அரசு வேலை கொடுப்பது சாத்தியமில்லாதது என்றார் தனியாரிலும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை என்று ஆகிவிட்டது, அதனல் டிஎன்பிஎஸ்சிக்கு நன்கு படித்து தேர்வு எழுதினால் ஒரு பத்துப்பைசா செலவு இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலை வீடு தேடி வரும் என்றார். அத்துடன் அரசு 60 வயது கடந்தவர்களுக்கு கொடுக்கும் முதியோர் ஒய்வு ஊதியத்தை கடந்த காலங்களில் பலர் 30, 40 வயதிலேயே முறைகேடாக பெற்று அரசின் பணத்தை காலி செய்துவிட்டனர். எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து 60 வயது ஆனவர்கள் பயணடையும் வகையில் அவர்களுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்றார். வழக்கமாக சர்ச்சையாக பேசி விமர்சனத்திற்குள்ளாகிவரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது அதிகம் படித்ததால்தான் வேலைகிடைக்கவில்லை என்று பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)