கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் எட்டு உயர்நீதிமன்றங்களுக்காக தலைமை நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விக்ரம் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர், 2009இல் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்ந்தார்.                மற்ற தலைமை நீதிபதிகள் நியமன விவரம்: நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி - ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் நீதிபதி அஜய் லம்பா - கவுஹாத்தி உயர்நீதிமன்றம் நீதிபதி ரவி சங்கர் ஜா - பஞ்சாப் & அரியானா உயர்நீதிமன்றம் நீதிபதி நாராயண சுவாமி - ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றம் நீதிபதி இந்திரஜித் மஹந்தி - ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நீதிபதி அருப் குமார் கோஸ்வாமி - சிக்கிம் உயர்நீதிமன்றம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்