ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசாரின் திடீர் சுற்றுலா: கோர்ட்டுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாத டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், சுற்றுலாவாக நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்றனர். டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பேரணி, துண்டுபிரசுரம் வழங்குதல், பிளக்ஸ் பேனர் மூலம் அறிவிப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி 4 ரோடு அருகே, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 40 வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ராஜன் பேசுகையில், 'டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்,' என்றார். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் வந்த 40 பேரையும், தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று, மாவட்ட முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம், விபத்து தீர்ப்பாயம் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் என ஒவ்வொரு நீதி மன்றமாக காண்பித்தனர். நீதிமன்ற விபரங்கள், நடைமுறைகள், எடுத்துக் கொள்ளும் வழக்குகள், குற்றங்களின் தண்டனை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அனைவருக்கும் டீ, பிஸ்கெட் வழங்கி, இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் நிச்சயம் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். Tags: ஹெல்மெட் அணிபோலீசார் சுற்றுலா


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்