காவல்துறை என்னும் ஒரு ரோஜா தோட்டத்தில் வருண்குமார் போன்ற சில முட்செடிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்த இந்த 48 நாட்களில் காவல் துறையின் பங்கு மிகவும் ஒரு சிறப்புமிக்க செயல்பாடாக செயலாற்றிய நம் காவல்துறையை பாராட்டியே ஆகவேண்டும் அந்த அளவுக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களின் நலனே நம் நலன் கருதி இரவு பகலாக உணவின்றி உறக்கமின்றி மக்களுடைய நலனில் மூழ்கிக் கிடந்தார்கள் எனக்கூறலாம் தம்முடைய உறவுகளை கூட மறந்து அத்தி வரதர் தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அயராது பாடுபட்டு வந்தார்கள் மழையிலும் வெயிலிலும் சிறியோர் முதல் பெரியோர் கள் வரையிலும் ஊனமுற்றவர்களுக்கும் எந்த அளவுக்கு உதவ முடியுமோ அந்த அளவுக்கு உதவிகளை செய்து காட்டியவர்கள் நமது காவல்துறை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிசப்தமான உண்மை அதேபோல் ஊடகமும் பத்திரிக்கையின் சேர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய முக்கிய பங்கு பத்திரிக்கைக்கும் ஊடகத்துறைக்கு ம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது அப்படி இருவரும் கலந்து பணியாற்றிய போதிலும் வருண் குமார் ஐபிஎஸ் செய்தி சேகரித்து விட்டு வெளியே சென்றபோது ஜெயா டிவி செய்தியாளர் ரமேஷ் அவர்களை வருண்குமார் தாக்கியதும் இல்லாமல் அவருடைய உபகரணங்களையும் உடைத்து அத்துமீறல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது இதே வருன்குமார் அவர்கள் இந்த 48 நாட்களில் விவிஐபி பாதையில் ரவுடிகளை அனுமதிக்கப்பட்டுள்ளது இவர்களுடைய துறைசார்ந்த ஒரு ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அதிகார தோரணையில் அத்துமீறி ஒருமையில் பேசி தரக்குறைவாக நடத்தி அவரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்த போது இவர் எங்கு சென்றிருந்தார் அன்று இவருக்கு இந்த துணிச்சல் வரவில்லைய மாவட்ட ஆட்சியர் ஆய்வாளரை திட்டும் போது அருகிலிருந்த திருவண்ணாமலை எஸ்பி சிபி சக்ரவர்த்தி அவர்கள் கூட அங்கிருந்து ஒதுங்கிவிட்டார் ஆனால் பத்திரிகை துறையும் ஊடகமும் மாத்திரமே காவல்துறை சந்திக்கும் சிரமங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டியது அதன் மூலமாகத்தான் மாத்திரமே மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவித்தார் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகத்திற்கு பத்திரிக்கையிலும் ஊடகத்தின் மூலம் காட்டி இதன் மூலமாக மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஓய்வுபெற்ற காவல் துறை நண்பர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் உங்கள் துறை சார்ந்தவர்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க முடிந்தது ஒருவேளை அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளியே தெரியாமல் இருந்திருந்தால் அந்த ஆய்வாளர் எந்த அளவுக்கு மன வேதனைப்பட்டு இருப்பார் என்று அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும் அப்பொழுதெல்லாம் இதற்கு குரல் கொடுக்கத் தவறிய varun kumar எங்கிருந்தார் என்பது எங்களுடைய கேள்வி அரசியல் தலைவர்களும் பணம் படைத்தவர்களும் உயர் பதவியில் இருப்பவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்கள் வரும்போது அவருடன் வந்தவர்கள் அனைவரும் பாஸ் பெற்றுக் கொண்டு வந்தார்களா என்று உறுதியாக வருண்குமார் அவர்களால் கூற முடியுமா அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது ஆனால் பாமர மக்கள் புகார் கொடுக்கச் செல்லும் போது கீழ் மட்டத்தில் உள்ள கான்ஸ்டபிள் முதல் உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை பாரபட்சமில்லாமல் ஒருமையில் பேசுவார்கள் அதுமட்டுமில்லாமல் புகார் கொடுக்க வந்த அடித்தட்டு மக்கள் மாத்திரமே பாத்ரூமில் வழுக்கி விழுவது ஒரு வாடிக்கையாக நடந்து கொண்டு வரும் ஒரு நிகழ்வாக உள்ளது அதே மேல்மட்டத்தில் உள்ள அவர்களுடைய இதுவரை யாராவது அரசியலில் உள்ளவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் யாராவது இதுவரை வழிக்கு விழுந்தது உண்டா நேர்மையான அதிகாரிகள் மத்தியில் இதுபோன்ற கருப்பு ஆடுகள் சில இருக்கத்தான் செய்கின்றது ஆகவே ராஜேஷ் அவர்களை தாக்கிய வருண் குமார் ஐபிஎஸ் மீது துறை ரீதியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பொருள்களுக்கு ஈடு செய்ய வேண்டும் என மாநில காவல்துறை டிஜிபி ஐயா அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கிறோம் இவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதை இதன் மூலம் நாங்கள் நினைவுபடுத்துகிறோம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்