ஆக்கிரமிப்பில் சிக்கிய அராபத் ஏரி மீட்கப்படுமா?: வருவாய் துறை மீது பழிபோடும் ஆவடி நகராட்சி

திருமுல்லைவாயல் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவிய, அராபத் ஏரி, அரசு துறை அதிகாரிகள் ஆசியுடன், ஆக்கிரமிப்பில் சிக்கி, சுருங்கி விட்டது. ஏரியை காப்பாற்ற வேண்டிய ஆவடி நகராட்சி, வருவாய் துறை ஒத்துழைக்கவில்லை என, பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.சென்னை , ஆவடி அருகேயுள்ள திருமுல்லை வாயலில், 32 ஏக்கர் பரப்பிலான அராபத் ஏரி, பாசனத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. வசதி தாராளம் இந்த ஏரிக்கு, திருவள்ளூர் நெடுஞ்சாலையை ஒட்டி, 1.5 கி.மீ.,க்கு மட்டும், கரை அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதியில், கரை இல்லாததால், 2004 முதல், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.ஏரிக்குள், வீடுகள், சிறு தொழிற்சாலைகள், கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மின்சார வசதிகள் தாராளமாக கிடைத்துள்ளன. சில தொழிற்சாலைகளுக்கு, மும்முனை இணைப்பும் கிடைத்துள்ளது.ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆளும் கட்சியினர், வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஆதரவு கொடுத்து வருவதால், 32 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, தற்போது, ஏக்கராக சுருங்கி விட்டது. வீடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குழாய்கள் வழியாக ஏரிக்குள் பாய்கிறது. இதனால், அராபத் ஏரி, கழிவுநீர் தேக்கமாகி விட்டது.மேலும், அங்குள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களை எடுத்து வரும் லாரிகளால், குழாய்கள் சேதமடைந்து, கழிவுநீர் சாலையிலும் பாய்கிறது. இதனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதலும் ஏற்படுகிறது.இது தவிர, அருகில் உள்ள கடைகள், ஓட்டல்களில் இருந்து, இறைச்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள், கட்டட கழிவுகளும், ஏரிக்குள் கொட்டப்படுகின்றன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்