நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சினிமா நடனக் கலைஞர்களைப் பிடித்து போலீசார்

சென்னை பீமாஸ் நட்சத்திர ஓட்டல் பப்பில் பெண்களுக்கு ஓசியில் மது கொடுப்பதால், மனைவி மற்றும் நண்பர்களுடன் அளவுக்கதிகமாக மது குடித்து விட்டு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சினிமா நடனக் கலைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் சென்னை வடபழனி பீமாஸ் பிளஸ் நட்சத்திர ஓட்டலில் பார் நடத்த மட்டும் அனுமதி உள்ள நிலையில், அதனுடன் இணைந்த பப் (pub) ஒன்று அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கு மது அருந்தச் செல்லும் பெண்களுக்கு மது இலவசம் என்பதால் இளசுகள் தங்கள் காதலிகளையும், தோழிகளையும், பாருக்கு அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்றாக மாறிவருவதற்கு நிலைதடுமாறியபடி நிற்கும் இந்த ஜோடிகளே சாட்சி..! சனிக்கிழமை இரவு வண்ண விளக்குகள் ஜொலிக்க மது போதையில் ஆண்களும் பெண்களும் உற்சாக நடனமாடி பொழுதை கழிக்கின்றனர். ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதி என்ற விதிமுறை உள்ளதால், பெண்கள் இல்லாமல் ஆண்கள் தனியாக உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திருநகரை சேந்த 25 வயது சினிமா நடனக் கலைஞரான ஹேமந்த் குமார் தனது இளம் மனைவி மற்றும் 4 நண்பர்களுடன் இந்த பப்புக்குள் மது அருந்தச் சென்றுள்ளார். அங்கு ஓசியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவரது மனைவிக்கு போதை தலைக்கேறியது. அப்போது எல்லைமீறி நடந்து கொண்டதால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பப்புக்குள் கைகலப்பில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சண்டையிட்டுக் கொண்டே ஓட்டலுக்கு வெளியே சாலையில் வந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பி அந்த பெண், அருகில் உள்ள கடை ஒன்றில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தார். இதனால் அந்த கடைக்காரரை, குடிகார நண்பர்களுடன் சேர்ந்து ஹேமந்த்குமார் புரட்டி எடுத்துள்ளார். கடைக்காரருக்கு ஆதரவாக அருகில் இருந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சேர்ந்து குடிகார நடனக் கலைஞர்களை வெளுத்துக்கட்ட அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. image இதனால் அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. தகவல் அறிந்து வந்த வடபழனி காவல்துறையினர், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஹேமந்த்குமார், அவரது நண்பர்கள் 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த களேபரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹேமந்த்குமாரின் மனைவி, கூட்டத்திற்குள் புகுந்து தப்பிச்சென்றுவிட்டார். மூக்கு முட்டக் குடித்துவிட்டு இவர்கள் செய்த அடாவடியால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாருக்கு அனுமதி பெற்றுவிட்டு விதியை மீறி பப் (Pub) நடத்தும் இந்த ஓட்டலின் பார் அனுமதியை ரத்து செய்வதோடு, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்