இந்திய விஞ்ஞானத்தின் வளர்ச்சி வைகையில் தர்மாகோல் விட்டது. திரு. திருமாறன் ஜீ பேச்சு

மதுரை வைகைப் பெருவிழாவில் கலந்துகொண்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திரு. K.C.திருமாறன் ஜீ அவர்கள் பேசுகையில் வெள்ளத்தோடு கண்டுகளித்த வைகை இன்று பாலைவனமாக காட்சியளிப்பது என்னை மிகுந்த வேதனை அளிக்கிறது. இன்றைக்கு மரத்திற்கும் நீர் இல்லை, மக்களாகிய நமக்கும் குடிக்க நீர் இல்லை. 500மீட்டர் நீளம் பரப்பு கொண்ட வைகை தற்போது 250மீட்டர் நீளமாக குறைந்து ஆக்கிரப்பட்டுள்ளது. இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியாக வைகையில் தர்மாகோல் விட்டு நீரை பாதுகாத்ததை எண்ணி எங்கள் மனம் குளிர்ந்துவிட்டது, இவர்களா நம் நீர்நிலைகளை பாதுகாத்து கொடுக்கப்போகிறவர்கள்.நிலத்தடி நீரை பாதுகாப்பது மணல் அந்த மணலை சிமெண்ட்மூட்டையில் அடைத்து கடத்தி செல்கிறார் முதல்வரின் மகன். கடைக்குட்டி பிள்ளைதான் வீட்டுக்கு செல்லம் என்பார்கள், ஆனால் இங்கோ கடைசியில் இருக்கும் தமிழகமோ அனைத்திலும் வஞ்சிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இளைஞர்கள் பாராட்ட பட வேண்டும் தமிழகத்தின் சூழ்நிலை அறிந்து விழிப்புணர்வோடு நீர் நிலைகளை தூர்வாருதல், வீடுகளில் மழை நீரை சேகரிப்பது என செயல்படுவது மகிழ்ச்சியை தருகிறது. 100நாள் வேலை திட்டத்தை அனைத்து விவசாயிகளும் எதிர்க்க வேண்டும். 100 வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகள் மக்கள் என அனைவரையும் சோம்பேறி ஆக்கியது காங்கிரஸ் அரசு என குற்றம்சாட்டினார் Attachments area


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்