பிஸ்கட்டில் எலி மருந்தை கொடுத்து கொன்றுள்ளார் ஒரு தாய்.

மதுரை: பெற்ற குழந்தைகளுக்கு பிஸ்கட்டில் எலி மருந்தை கொடுத்து கொன்றுள்ளார் ஒரு தாய்.. எல்லாம் தன்னுடைய கள்ளக் காதலுக்காத்தான்! மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சருகுவலையபட்டியை சேர்ந்தவர் ராகவானந்தம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெயர் ரஞ்சிதா. 27 வயதாகிறது. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். ஆனால் கடந்த 2016-ம் வருஷம் வீட்டின் முன் 3 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது, எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். இதில், பார்கவி, யுவராஜா என்ற 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கிரிபாலன் என்ற குழந்தை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவும் உயிர் பிழைத்தான் எலி மருந்து இந்நிலையில் தன் குழந்தைகளுக்கு யாரோ எலி மருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றுவிட்டனர் என்று ரஞ்சிதா போலீசில் புகார் தந்தார். குழந்தைகள் இறந்துவிட்ட தகவலை கேட்டு, வெளிநாட்டில் இருந்து கதறியபடியே வந்தார் ராகவானந்தம் பிஸ்கட் பின்னர், வீட்டில் என்னதான் நடந்தது என்று மகன் கிரிபாலனிடம் கேட்டதற்கு, அம்மாவும், கல்யாண்குமார் என்பரும் சேர்ந்து எலிமருந்து தடவிய பிஸ்கட்களை சாப்பிட தந்தார்கள், அதை சாப்பிட்டபோது கசப்பா இருந்தது.. அதனால நான் துப்பிட்டேன்.. பார்கவி, யுவராஜாவும் சாப்பிட்டு விட்டனர்" என்று சொல்லி உள்ளான். தலைமறைவு அதிர்ச்சி அடைந்த ராகவானந்தம், போலீசில் புகார் தந்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.. அதனால் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. ராகவானந்தம், கோர்ட், போலீஸ் சென்றவுடனேயே ரஞ்சிதா எஸ்கேப் ஆகியிருந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரஞ்சிதா , கள்ளக்காதலன் கல்யாண்குமாரை போலீசார் கைது செய்தனர். ஜோடி கைது இருவரின் கள்ளக்காதலுக்கு 3 பிள்ளைகளும் இடைஞ்சலாக இருந்ததால் எலிமருந்து தடவிய பிஸ்கட்டுகளை தந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில், 3 வருஷத்துக்கு பிறகு, கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)