இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றக் கூட்டத் தொடரை எதேச்சதிகாரமாக நீட்டித்த மத்திய பா.ஜ.க. அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தலாக் மசோதா, மாநிலங்கள் அவை யில் 30.07.2019 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு இது 'அச்சேதின் - நல்ல நாள்; இந்த மசோதாவை எதிர்த்தவர்களுக்கு இந்த நாள் 'புரே தின்' - கெட்ட நாள் - அதாவது கருப்பு தினம் எனலாம். ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, ஆகஸ்டு 3 ம் தேதி வரை நீட்டிப்பதற்கு மோடி அரசு அறிவிப்பு செய்தபோதே, அரசின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. நாடாளுமன்றக் கூடடத் தொடரை நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டு, தான் நினைத்ததைச் சாதிக்கும் சர்வாதிகாரப் போக்கின் அடிப்படையில் கூட்டத் தொடரை நீட்டித்துக் கொண்டது. இந்த எதிர்பாராத நீட்டிப்புக் காரணமாக, பல உறுப்பினர்கள் வருகை தரக்கூட முடியாதவாறு அவர்களின் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி முத்தலாக் மசோதாவை அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. * சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக்குவது ஜனநாயக மரபல்ல. * சிறுபான்மையினரின் மதஉரிமைகளில் தலையிடுவது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறிச் செய்யும் சட்ட முரண் ஆகும். * முத்தலாக் சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லாத நிலையில் - சுப்ரீம் கோர்ட்டு முத்தலாக் செல்லாது எனத் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில் & இந்தச் சட்டம் கொண்டு வருவது பாரதீய ஜனதா கட்சியின் எதேச்சாதிகாரத்தை வெளிப்படுத்துவதாகும். * முத்தலாக் சட்டம் மூலம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்குரிய வாயில்களைத் திறப்பதற்கு மத்திய அரசு முனைந்து முயற்சி செய்து வருகிறது. இப்பேர்க்கொத்த கருத்துக்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் காட்டியுள்ள நபி வழியில் இருந்து ஒரு சிறிது பிறழ்ந்தாலும் இது போன்ற சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதே அந்தத் தெளிவாகும். திருமண உறவு, வாழ்வு, முறிவு போன்ற விவகாரங்களில் மஸ்ஜிதை மையமாகக் கொண்டியங்கும் மஹல்லா ஜமாஅத்துகளில் அரசு காஜிகளின் வழிகாட்டுதல்களின்படி முஸ்லிம்கள் நடந்து கொள்வார்களானால் இத்தகைய சட்டங்களுக்கே அவசியம் இல்லாமல் ஆகிவிடும். இருப் பினும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் இத்தகைய சட்டங்களால் சமுதாயத்துக்கு எந்தவொரு பாதிப்பும் வரப்போவ தில்லை. மஹல்லா ஜமாஅத்துகளின் செயல்பாடுகளுக்கு முறையும் நிறைவும் வழங்கப்படுவதற்கு சமுதாயம் ஒன்றுபடுவதுடன், மாநில, மாவட்ட காஜிகள் மற்றும் சங்கைமிகு உலமாக்களின் மார்க்க வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் வகையிலும் சமுதாய மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதே இக்காலத்தின் கட்டாயமாகும். முத்தலாக் மசோதாவை எதிர்த்துத் தெளிவான கருத்துக்களைப் பதிவு செய்திருக்கும் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு சமுதாயம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் அவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் பி.வி. அப்துல் வகாப், மசோதாவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார். இதனை மூடிமறைத்து, இ.யூ. முஸ்லிம் லீக்மீது அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் அவையிலேயே இல்லை என்னும் தவறான செய்தியைச் சில ஏடுகள் வெளியிட்டு பத்திரிகை தர்மத்தைக் குலைத்திருக்கின்றன. இந்திய யூனியன்முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சிறந்த சேவையாற்றி வருகிறார்கள். காலம் கனிந்து வரும்; இஸ்லாமிய சட்டங்களின் சீரையும் சிறப்பையும் மாண்பையும் மகத்துவத்தையும் நாடும் நானிலமும் விரைவில் அறியும்; உணரும், போற்றும் காலம் மிக விரைவில் வரவே இருக்கிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)