முகமூடி கொள்ளையர்களை துணிச்சலோடு எதிர்கொண்டு விரட்டியடித்த, சண்முகவேலு-செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது

முகமூடி கொள்ளையர்களை துணிச்சலோடு எதிர்கொண்டு விரட்டியடித்த, சண்முகவேலு-செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது. மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரம்யாலஷ்மிக்கு, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்த சண்முகவேலு-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சென்னை காவல் ஆணையரகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை, வணிகவரித்துறைக்கு முதலமைச்சரின் நல ஆளுமை விருது வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார். மகளிர் நலனுக்கு தொண்டு புரிந்ததற்கான விருதுகளும் வழங்கப்பட்டன முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நவின்குமார், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை மாவட்டத்தை சேர்ந்த கலைவாணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் எஞ்சினை வடிவமைத்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது, இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்தியது உள்ளிட்டவற்றிற்காக சிவனுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சிவன் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் இருந்ததால் வேறுறொரு நாளில் வழங்கப்பட உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்