நெல்லை மாவட்டத்தில்சுரண்டை பகுதியில் சூதாட்ட கிளப்புகள் பெருகி வருவதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமான சுரண்டையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருவது பெண்களே. இப்பகுதி பெண்கள் இரவு பகல் பாராமல் பீடி சுற்றுவது, விவசாய வேலைகள் செய்வது, கைத் தொழில் செய்வது என ஓரளவிற்கு பொருளாதாரத்தில் வீட்டையும், நகரையும், உயர்த்தி பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர். முன்பு மதுபான கடைகள் சுரண்டை பகுதியில் இருந்த நிலையில் பெருவாரியான ஆண்கள் வேலை முடித்து மதுபானங்களை குடித்து விட்டு வீண் பிரச்சனை, வாக்குவாதம், விபத்து, சண்டை என ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது சுரண்டை பகுதியில் எங்குமே மதுபான கடைகள் இல்லாத நிலையில் சுரண்டையில் விபத்து மற்றும் பிரச்சினைகள் குறைந்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப்புகள் பெருகி வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் நகரின் மையப்பகுதியில் சூதாட்ட கிளப் துவக்க முயற்சித்த போது பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுரண்டை பாவூர்சத்திரம் ரோட்டில் சிவன் கோவில் அருகில் ஒரு கிளப்பும் சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டில் பெண்கள் அதிகமான நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு கிளப்பும் நடந்து வருகின்றது. இதில் விளையாட்டுகள் என்ற பெயரில் சூதாட்டங்கள். ரம்மி உட்பட பல்வேறு சூதாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். இதில் செல்லும் ஆண்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் இவர்கள் உழைக்கும் பணத்தை விட வீட்டில் பெண்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து சூதாடி பணத்தை இழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதனால் கடன் நெருக்கடிக்கு உள்ளாவதுடன் வட்டி தொழில் கொடிகட்டி பறக்கிறது. இதனால் குடும்பங்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுரண்டை அருகே உள்ள பூபாண்டியாபுரம் சீனிவாசன் காலனி அருகில் புதிதாக ஒரு சூதாட்ட கிளப் துவக்க இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் காட்டுத் தீயாக பரவியது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாவட்ட அளவிளான அலுவலரிடம் விண்ணப்பித்து அதற்கான அனுமதி வாங்கி வருவதாகவும் அதில் ரம்மி உட்பட பல்வேறு விளையாட்டுகள் விளையாட அனுமதி தர படுவதாகவும் காவல்துறை மற்றும் உள்ளூர் வருவாய்த் துறையிடம் எவ்விதமான அனுமதியும் அல்லது தடையின்மைச் சான்று பெறுவதில்லை என்பதால் இதுபோன்ற சூதாட்ட கிளப்புகள் பெருகி வருவதாக தெரிவித்தனர். இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் ஆண்கள் தைரியமாக சூதாடி பணத்தை இழந்து வருவது அதிகரித்து வருகின்றது ஆங்காங்கே பணம் வைத்து சூதாடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து சூதாட்டத்தை தடுத்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதி, வழிபாட்டுதலங்கள் உள்ள பகுதி, பெண்கள், பொதுமக்கள், மாணவ, மாணவர்கள் அதிகமாக நடமாடும் இடம் என ஆய்வு செய்யாமல் மாவட்ட அளவிலான அலுவலரிடம் மட்டும் அனுமதியைப் பெற்று சூதாட்ட கிளப்புகள் நடப்பது இப்பகுதி பெண்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரண்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூதாட்டக் கிளப்புகளை மூடுவதுடன் இனி இவ்வித கிளப்புகள் துவக்க வருங்காலங்களில் அனுமதிக்க கூடாது என இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்