டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுக்கு இனி அலைச்சல் இல்லை!

மோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019, அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 31 ஆண்டுகள் பழைமையான சட்டம் (மோட்டார் வாகனச் சட்டம் 1988), 93 திருத்தங்களோடு முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது.இரவில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், வியர்வையும் ரத்தமும் தெறித்து ஓடும் இந்திய சாலைப் போக்குவரத்துக்குப் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது.பொதுமக்களுக்கு இதனால் என்ன பயன்?இருக்கிறது.ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு போன்றவற்றை அந்தந்த ஏரியாவில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டு (பிரிவு: 8), இந்தச் சேவைகளை தமிழகத்தில் உள்ள எந்த ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது நல்ல சேதி!இந்தச் சேவைகளைத் தருவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகங்களைத் தாண்டிஅங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்குச் சட்டத்தில் வழிவகை இருக்கிறது.பாஸ்போர்ட் வழங்குதலில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, அங்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதுபோன்ற காலத்தின் தேவைக்கேற்ற நடைமுறைகளின் மூலம், ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வருவது அலைச்சல் மிகுந்த பணி என்பது மாறி, இனிமையான ஓர் அனுபவம் என்ற நிலையை நோக்கி நகரும். வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு திட்டம், இந்தச் சட்டத்தினமூலம் இந்தியாவிலும் அறிமுகமாகிறது. தாங்கள் வாங்கிய ஒரு வாகனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவோ, வாகனத்தின் குறிப்பிட்ட பாகம் முறையாக இயங்கவில்லை என்றோ பொதுமக்கள் கருதினால், இதுகுறித்து அரசிடம் முறையிடலாம். இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருமானால், பழுதோடு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெறுமாறு அந்த நிறுவனத்துக்கு அரசு உத்தரவிடலாம். மேலும், அபராதம் விதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு புதிய வாகனம் தரவேண்டிய பொறுப்பையும் அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அருமையான அம்சம்தானே! > மோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019-வின் முக்கிய அம்சங்களையும், அதன்மூலம் மக்களுக்கு ஏற்படும் இதர நன்மைகள் குறித்தும் 'ஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை! - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா' எனும் தலைப்பில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் விரிவாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)