அமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்!' - பரபரப்பில் அ.தி.மு.

அடுத்தடுத்து அமித் ஷாவை சந்தித்த வேளையில், தேர்தலில் தன் மகன் வெற்றி பெற்றபிறகு அமித் ஷாவையோ, பிரதமரையோ துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனிப்பட்ட ரீதியில் சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், நாளை (ஜூலை 22-ம் தேதி) மதியம் 12 மணிக்கு அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இன்று மாலை 6:40 விமானத்திலேயே அவர் டெல்லி சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால் வைத்திலிங்கத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி காய் நகர்த்த, மத்திய அமைச்சர் கனவு கலைந்து போனது. அம்முயற்சியில் மீண்டும் ஈடுபட ஓ.பி.எஸ். தயாராகிவிட்டார்.இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், ``மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பொறுப்பு வாங்கிவிட ஓ.பி.எஸ். கடுமையாக முயற்சித்தார். ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால் வைத்திலிங்கத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி காய் நகர்த்த, மத்திய அமைச்சர் கனவு கலைந்து போனது. அம்முயற்சியில் மீண்டும் ஈடுபட ஓ.பி.எஸ். தயாராகிவிட்டார்.அதேவேளையில், அமைச்சர்கள் சிலர் தனக்கெதிராக கட்சிக்குள்ளேயே வேலை பார்ப்பதையும் அமித் ஷாவின் பார்வைக்கு கொண்டு செல்லப் போகிறார். விரைவில் அவர்கள் சார்ந்த பினாமி நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படலாம். ஓ.பி.எஸ்.-ன் இந்த டெல்லி பயணத்தில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர்.ஓ.பி.எஸ். வட்டாரத்தில் விசாரித்த போது, ``இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், விவரிப்பதற்கு ஒன்றுமில்லை” என்று ஒற்றைவரியில் முடித்துக் கொண்டனர். மரியாதை நிமித்தமானதா? காரிய சித்திக்கானதா? என்பது நாளை தெரிந்துவிடும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்