கிரண்பேடியின் கருத்துகண்டனம் தமிழக சட்டப்பேரவைதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

கிரண்பேடியின் கருத்துகண்டனம் தமிழக சட்டப்பேரவைதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு சென்னை: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும், தற்போதைய சட்டசபையின் உறுப்பினர்களான கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு சபை கூடியதும், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. திமுக உள்பட எதிர்க்கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்; இதில், தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அடிப்படையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். அப்போது தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் திமுக உள்பட எதிர்க்கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2020-ல் நிலத்தடி நீர் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் பதிவு செய்பவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் குடிநீர் வாரியம் தவித்து வருகிறது. அரசுக்கு ஸ்டாலின் கேள்வி: குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ. 27,988 கோடியை குடிநீர் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கியது. 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.37 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் ஒருநாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மக்களை கொச்சைப்படுத்தி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நிர்வாகம் நடத்த தகுதி இல்லாத கிரண்பேடிக்கு தமிழக அரசை குறைகூற என்ன தகுதி உள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகமும் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி பற்றி ஸ்டாலின், அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். திமுக வெளிநடப்பு; புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுவதை குறிப்பிட்டு கிரண்பேடி டிவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். ஸ்டாலின் பேட்டி; * குடிநீர் பிரச்சனை பற்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேச வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். * தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசும் போது வரம்பு மீறி புதுவை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். * தமிழக மக்களை மிக கேவலமான முறையில் கிரண்பேடி விமர்ச்சித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். * தமிழக மக்கள் கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள் என்று கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்; தமிழக மக்கள் சுயநலமிக்கவர்கள் மற்றும் கோழைத்தனமானவர்கள் என்று விமர்ச்சித்துள்ளார்: கிரண்பேடி பற்றி தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். * கிரண்பேடியை விமர்சித்து நானும், அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார். * தமிழக மக்களை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இழிவாக பேசியதை ஏற்க முடியாது. * அரசு அறிவித்த குடிநீர்த் திட்டங்கள் எட்டு வடிவில் தான் உள்ளன; செயல்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!