வேலூர் அம்மாவின் கோட்டை என நிரூபிப்போம் வேலூர் கழக வேட்பாளருக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு அமைச்சர்கள் திட்டவட்டம்

அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். வேலூரில் கழக வேட்பாளருக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அமைச்சர்கள் திட்டவட்ட மாக தெரிவித்தனர். வாணியம்பாடியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வாணி யம்பாடி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிர்வாகிகளின் தேர் தல் பணி குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோ சனை வழங்கி பேசினார். இதில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோ பர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் கழக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் ஜாபிராபாத், தேவஸ்தானம், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய தொழிலதிபர்கள், இஸ்லாமிய மக்களையும் மற்ற வாக்காளர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். பின்னர் அமைச்சர் கே.சி. வீரமணி, செய்தியாளர் களிடம் கூறுகையில், நாடா ளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றி வரு கின்றனர். இதை பார்க்கும் போது கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 27-ந்தேதி மற்றும் 2.08.2019ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், 29-ந்தேதி துணை முதலமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் ஆகியோர் வருகையையொட்டி அதற் கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:நடைபெறுகின்ற தேர்தல் முக்கியமான தேர்தலாகும். கடந்த காலத்தை மறந்து கழக தொண்டர்கள் மக்களை சந்திக்க வேண்டும். அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்பட வில்லை. கழக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்கழக ஆட்சியின் மீது அ தி ருப்தி இல் லைஅம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும் புகின்றனர். கழக வேட்பாளர் ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிக ளையும் கழக அரசு செய்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு கழகத் தொண்டர்களும்ம்வாக்காளர்களை அழைத்துச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும்ஒரு லட்சத்து 18 ஆயி ரத்து பொறுப்புகள் உள் ளாட்சித்துறையில் உள்ளனஇத்தேர்தலில் பெறும் வெற்றி உள்ளாட்சித் தேர்தல் வெற் றிக்கு வழிவகை செய்யும். மேலும் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது மறைந்து விடும். கழகம் சார்பில் போட் டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெற வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு கழக தொண்டனும் அய ராது பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பாலகங்கா, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் கோவி.சம்பத்குமார், நகர கழக செயலாளர் சதாசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)