பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி போன்ற விவரங்கள் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏதாவது விவரங்களை கேட்கும்போது, இஎம்ஐஎஸ் இணையதளத்தின் மூலம் பெற்று அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை பெறுவதற்காக தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. மற்ற முக்கியமான காரணங்களுக்கான ஆய்வு கூட்டத்தை சனிக்கிழமையிலோ அல்லது மாலை நேரங்களிலோ நடத்திட வேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை அளிக்கவும், பெறவும் முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் செல்வதை தவிர்க்கப்பட வேண்டும். விவரங்களை இமெயில் மூலமாக அனுப்பலாம். இவ்வாறு செய்தால் கல்விப்பணி பாதிக்காது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் விவரங்களை அளிக்க வெளியே செல்லக்கூடாது. இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)