ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அவரது குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதியளிக்கும் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக், ஜாதி தகராறில் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ 5 லட்சம் நிதியளிக்கும் கூட்டம் நடந்தது. அதில் மா.கம்யூ., கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், வாலிபர் சங்க மாநில செயலாளர் ரெஜீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அசோக் குறித்த பாடல் சிடி மற்றும் புத்தகம் வெளியிடப்பட்டது. முத்தரசன் பேசுகையில், 12 நாட்களுக்கு ஒரு ஆணவ படுகொலை நடக்கிறது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கொலைகள் நடந்தாலும் எங்களுடைய போராட்டம் ஓயாது என்றார். எதிர்க்கட்சிகளை சீர்குலைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது இவ்வாறு மத்திய அரசு மீது யெச்சூரி குற்றம்சாட்டினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)