புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம்... எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள்..?

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில், சில குற்றங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகியவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச அபராதம் என்பது ரூ. 100 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் ஆபத்தான வகையில் வேகமாக வாகனத்தை ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என இருந்தது. ஆனால் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. அதேபோல பெர்மிட் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது இனி 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இன்றி வாகனத்தை ஓட்டும் பட்சத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் அது இனி 2 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக சிறுவர்கள் வாகனம் இயக்கி பிடிபட்டால் தரப்படும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவ்வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும். அதேபோல வாகனத்தை ஒட்டிய சிறுவர் மீதும் சிறார் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்