குற்றாலம் சாரல் விழா குறித்து கலெக்டர் ஷில்பா ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சாரல் சீசன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் 2019 சாரல் திருவிழா ஜூலை இறுதி வாரத்தில் தொடங்குதல் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூ ட் ட த் தி ல் மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்த தாவது:பிரசித்திபெற்ற குற்றால சாரல் தி ரு விழாவிற்கு பல் வேறு மா நிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற் று ல ா ப ய ணி க ள் அதிகளவில் ஆண்டுதோறும் வ ரு ைக புரி வார் க ள் . குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தினை ஒ ரு ங் கு ெச ய் து , அருவிகளில் பொதுமக்களின் சமூக விரோத செயல் நடை பெறாதவாறு காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் நன்றாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்திட ேவ ண டு ம் . பெண் க ள் உடை மாற்றும் அறை பகுதிகளில் கூடுதலாக பெண் காவலர்களை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருந்திட வேண்டும். விபத்து மீட்பு பணிகளுக்கு 108 அவசர கால ஊர் தி தயார் நிலையில் வைத்திட வேண்டும். சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகம் பொது மக்களின் வருகைக்கு தகுந்தவாறு பேரு ந் து வ ச தி க ைள ஏற்படுத்திட வேண்டும். காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவுப் பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். அருவிகளில் குளிக்கும் பொழுது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகிக்கக் கூடாது என்ற வாசகத்தினை அனைத்து அருவி பகுதி க ளி லு ம் வி ள ம் ப ர ப் பலகைகளை வைத்திட வேண்டும். குற்றாலத்திற்கு வருகை * தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பய ணி க ளை 'ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சாரல் திருவிழா ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறவுள்ளது. தொடக்க மற்றும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு சாரல் திருவிழாவினை சிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வ ரு வ ா ய் அ லு வ ல ர் முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. அருண் சக்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சுற்றுலா அலுவலர் சஞ்தா ராமன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)