ரயில்வே துறை உடன் இணைந்து பிஸ்னஸ் செய்து மாதம் ரூ.80,000 சம்பாதிப்பது எப்படி?

ரயில்வே துறை உடன் இணைந்து டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்தியன் ரயில்வேஸ் கீழ் செயல்பட்டு வரும் ஐ ஆர் சி டி சி ரயில்வே டிக்கெட் புக்கிங் ஏஜென்ட் பிரான்சிஸ் சேவை வழங்குகிறதுஇதன் மூலம் ஐஆர்சிடிசி ஏஜெண்ட் உரிமையைப் பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் சேவை வழங்கி அதில் கமிஷன் தொகையைப் பெற முடியும்.ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்ட் என அழைக்கப்படும் இந்த உரிமையைப் பெற ஐஆர்சிடிசிக்கு ஒரு முறை கட்டணமாக 20,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதில் 5,000 ரூபாய் திருப்பி அளிக்கக் கூடிய டெபாசிட்டாக இருக்கும். இந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஆண்டுக்கு 5,000 ரூபாயை கட்டணமாக ஐஆர்சிடிசிக்கு செலுத்த வேண்டும்.ஐஆர்சிடிசி ஏஜெண்ட் உரிமையை பெறுவது எப்படி?ஐஆர்சிடிசி ஏஜெண்ட்டாக இணைய விரும்புபவர்கள் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் ஒப்பந்தம் போடப்படும். டிமாண்ட் டிராஃப்ட் மூலம் 20,000 ரூபாய் ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பம், பான் கார்டு, வருமான வரி தாக்கல் விவரங்கள், முகவரி சான்றிதழ் போன்ற விவரங்களை ஐஆர்சிடிசிக்கு செலுத்துவதன் மூலம் எளிதாக ஏஜெண்ட்டாக மாறிவிடலாம். கமிஷன் விகிதங்கள்:ஐஆர்சிடிசி ஏஜெண்ட்டான பிறகு ஸ்லீப்பர் டிக்கெட் புக் செய்தால் 30 ரூபாயும், ஏசி டிக்கெட் என்றால் 60 ரூபாயும் கமிஷன் கிடைக்கும். குறைந்தது 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ரயில் டிக்கெட்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.மேலும் ரயில்வே ஓய்வு அறை, விமான டிக்கெட் போன்றவற்றையும் ஐஆர்சிடிசி ஏஜெண்ட்களால் வாடிக்கையாளர்களுக்கு புக் செய்து வழங்க முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்