தென்காசி தி.மு.க., எம்.பி.,தனுஷ்குமார் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் தென்காசி தி.மு.க., எம்.பி.,தனுஷ்குமார் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து சனிதோறும் புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்வதில்லை. தென்காசி எம்.பி., ஆவண செய்ய சுட்டிக்காட்டப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கு தென்காசி எம்.பி.,தனுஷ்குமார் வந்தார்.அங்கு பிளாட்பார்ம் உட்பட பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த பின் ஸ்டேஷன் அதிகாரி ஜெயபாலிடம் ஆலோசித்தார். ரயில் பயணிகள் சங்க செயலர் முனியப்பனிடம் செய்து தரப்பட வேண்டிய வசதிகள் மற்றும் தேவையான ரயில்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அப்போது பிளாட்பார்ம் உயர்த்துதல், நடைமேம்பாலம் கட்டுதல், கூடுதல் அடிப்படை வசதிகள் செய்தல், தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்குதல், வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்லுதல், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ரயில்வேத்துறை அமைச்சர், ரயில்வே வாரியத்தலைவர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர், மதுரை மண்டல ரயில்வே அலுவலர் ஆகியோரை சந்தித்து தீர்வு காண்பதாக எம்.பி., உறுதி அளித்தார்.ரயில் வசதி கேட்பு கூட்டம் ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தேவையான வசதி மற்றும் ரயில் சேவைகளின் கூடுதல் தேவை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. தி.மு.க., எம்.பி., தனுஷ் தனுஷ் குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன், ரயில் பயனாளர்கள் சங்கம் மற்றும் ராஜபாளையம் வியாபார சங்கத்தை சேர்ந்தவர்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கார் நிறுத்துமிடம், மதுரையில் இருந்து புறப்படும் வைகை, தேஜஸ் ரயில்களை இணைக்கும் வகையில் தென்காசியில் இருந்து கூடுதல் ரயில், செங்கோட்டை - பங்களூர் அதிவிரைவு வண்டி, கேரளாவுக்கு சரக்கு கொண்டு செல்ல கொல்லம் விரைவு வண்டியில் சரக்கு பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்