அரசியல் காழ்ப்புணர்ச்சியலேயே விசாரணை..! திமுக பிரமுகர் சீனியம்மாள் குற்றச்சாட்டு நெல்லை: "என் மகன் எங்கே.. போலீசார் எங்கே வெச்சிருக்காங்கன்னே தெரியலை.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர்தான்

திமுக பெண் நிர்வாகி சீனியம்மாள் குற்றம் சாட்டி உள்ளார் முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் திமுக பெண் நிர்வாகி சீனியம்மாளுக்கு தொடர்பு இருக்கும் என்று ஒரு சந்தேகம் எழுந்தது. அதனால் நெல்லை போலீசார் மதுரைக்கே சென்று 2 முறை விசாரணை நடத்தினர். அதற்கு சீனியம்மாள் சொன்னதாவது:அவசியம் இல்லை"எனக்கு உடம்பு சரியில்லை, கூடல்நகரில் இருக்கிற என் மகள் வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன். வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க" என்று வலுவாக மறுத்தார்.பதறிட்டாங்கஇருந்தாலும் நெல்லை போலீசாரின் தீவிர முயற்சியால் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனே கொலையாளி என்று முடிவாகி உள்ளது. நேற்று போலீசில் வாக்குமூலம் அளிக்கும்போதுகூட, "சின்ன வயசில் இருந்தே உமா மகேஸ்வரியை கொல்லணும்னு எனக்கு வெறி இருந்தது. கொலைகளை செய்து காரில் சென்று கொண்டிருக்கும்போது எங்க அம்மாவுக்கு போனில் விஷயத்தை சொன்னேன். அவங்க பதறி போய்ட்டாங்க.." என்று கூறியிருந்தார்.அபாண்டம்ஆனால் சீனியம்மாளும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். "என் பையன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவனை கைது செய்திருக்காங்க. கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்.மகன் எங்கே?என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைச்சிருக்கு. மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் தங்கி இருக்கிறோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு போன பிறகு அவனை வேலைக்கு அனுப்பலாம்னு இருந்தோம். ஆனா இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துட்டாங்க. என் மகன் எங்கேன்னு தெரியலை. போலீசார் எங்க வெச்சிருக்காங்கன்னும் தெரியல. அதனால மகனின் நிலை குறித்து தெரிவிக்ககோரி, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய போறேன்.2 பேர்தான்இது எல்லாத்துக்கும் காரணம் நெல்லையை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் அந்த 2 பேர்தான். அவங்களுடைய தூண்டுதலில்தான் இவ்வளவு பிரச்சனையும் எங்களுக்கு வந்திருக்கிறது. திரும்பவும் சொல்றேன்.. எனக்கும் உமா மகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்திச்சு பேசியிருக்கோம். சிபிசிஐடி போலீசாவது இதை நேர்மையாக விசாரிக்கணும்" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்