காருக்கு பல லட்சம்; நம்பருக்கு சில லட்சம்

டேராடூன் : அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் பா.ஜ., எம்எல்ஏ., பிரணவ் சிங் சாம்பியன், தற்போது காருக்கு கவர்ச்சி நம்பர் வாங்குவதற்கு ரூ.5.51 லட்சம் செலவிட்டுள்ளது, மற்றொரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. பத்திரிக்கையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்க முயன்ற விவகாரத்தில் 3 மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் உத்திரகாண்ட் மாநில பா.ஜ., எம்எல்ஏ., பிரணவ் சிங். 2 நாட்களுக்கு முன் , காலில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதை தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடிய பிரணாவ், 4 துப்பாக்கிகளுடன் நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் திருநங்கையான ரஜினி ராவத், 0007 என்ற விஐபி நம்பரை வாங்க அதிகபட்சமாக ரூ.1.13 லட்சம் செலவிட்டார். உத்தரகாண்ட் மாநில போக்குவரத்து துறை ஒவ்வொரு மாதமும் விஐபி நம்பர்களை ஆன்லைனில் ஏலத்திற்கு விட்டு வருவது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)