ரேஷன் பொருட்கள்ஆர்டர் செய்தால் வீட்டுக்கு வந்துசப்ளை..!

நாட்டிலேயே முதன் முறையாக ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை ஆந்திர அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க, விரும்பும் பொருட்களை தொலைபேசியில் தெரிவித்தால் வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்டதாகவும் ரேசன் கடைகளில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்க இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ரேசன் பொருட்கள் கூடுதல் விலைக்கு கருப்பு சந்தையில் விற்கப்படுவதும் தடுக்கப்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்