சபாஷ்... சரியான போட்டிதான்

சென்னை காவல்துறையில் ஒரு கூடுதல் ஆணையர், நான்கு இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்களைப் பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் துறையையே புரட்டிப் போட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க... ஜாபர்சேட் சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்குக் குறி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்தப் பணியிடமாற்றத்தில், சென்னை மாநகர காவல்துறைக்குள் வந்திருக்கும் நான்கு துணை ஆணையர்கள் பற்றிய மர்மம் யாருக்குமே புரியவில்லை என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். அதிகப்படியான லஞ்சப் புகாரால், சென்னை காவல் துறையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் அதிகாரி மீண்டும் அடியெடுத்து . வைத்த மர்மமும் விலகாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளியான பணியிடமாற்ற அறிவிப்பில் அவரது பெயர் அடிபட்டு, பின்னர் உயர் அதிகாரிகள் தலையிட்டதால், மாம்பழ நகருக்கே மீண்டும் மாற்றப்பட்டார். அவர் சென்னைக்குள் நுழைந்திருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. வடசென்னை பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகம். அங்கு சட்டம் ஒழுங்கில் அனுபவமுள்ள ஒருவரைத்தான் பணியமர்த்து வார்கள். ஆனால், வண்ணாரப்பேட்டை துணை ஆணையரான கலைச்செல்வனை நீலகிரி எஸ்.பி-யாகப் போட்டுவிட்டு, அவர் பணியிடத்தில் சமூக மற்றும் மனித உரிமைகள் உதவி ஐ.ஜி-யாகப் பணியாற்றிய சுப்புலட்சுமியைப் பணியமர்த்தியுள்ளனர்.சென்னை நகரில் ரோட்டோர ஹெல்மெட் கடை களிடம் மாமூல் வசூலித்த உயர் அதிகாரி ஒருவர், கொசுவலைக்குப் புகழ்பெற்ற மாவட்டத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். கரூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் அரசியல்வாதிகளின் துணையுடன் மணல் கொள்ளை கனஜோராக நடைபெறுகிறது. திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணனோ கறார் பார்ட்டி' எனப் பெயரெடுத்தவர். 'அரசியல்வாதி களுக்கும் இவருக்கும் சீக்கிரமே முட்டிக்கொள்ளும்; நீண்ட நாள் இப்பதவியில் தொடர்வது சந்தேகம்தான்' என 'உச்' கொட்டுகிறது காவல்துறை வட்டாரம். இந்தப் பணியிட மாற்ற உத்தரவிலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது மத்திய குற்றப்பிரிவில் நடைபெற்ற மாற்றம்தான். இந்தத் துறையில், 'எந்தக் கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது' என்று ஆட்டம் போட்ட ஓர் அதிகாரி மாற்றப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறிப்பது, பெண் ஆய்வாளருடன் கும்மாளம் என ஏகத்துக்கும் ஆடி வந்தவரை, நான்கு பாயின்ட்டுகளைச் சொல்லி முதல்வருக்கு நோட்' போட்டு காலி செய்துவிட்டதாம் உளவுத்துறை.மத்திய குற்றப்பிரிவின் உயர் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி தலைமையில் புதிய டீம் பொறுப்பேற்றுள்ளது. துணை ஆணையர்களான எஸ்.ஆர்.செந்தில்குமார், மல்லிகா மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக கே.ராஜேந்திரன், நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கான ரேஸில் திரிபாதியுடன் முட்டி மோதிய ஜாபர் சேட், சென்னை மாநகர் காவல் ஆணையர் பதவிக்குக் குறிவைத்து களமிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், “சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் நெருங்கிவிட்டன. இந்தப் பொறுப்பில் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளையும் நியமிக்கலாம். இந்தப் பதவி ஒன்றுதான், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வராதது. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கோரிக்கையாகத்தான் டி.ஜி.பி அனுப்ப முடியுமே தவிர, சென்னை ஆணையருக்கு உத்தரவிட முடியாது. இந்தப் பதவிக்குத்தான் ஜாபர் சேட் குறி வைத்துள்ளார். இதனால், திரிபாதிக்கு இணையாகப் பதவி பெற்ற திருப்தியும் கிடைக்கும்... 2020-ல் ஓய்வு பெறும்போது சென்னை காவல் ஆணையராக ஓய்வுபெற்றது போலவும் ஆகிவிடும் எனக் கணக்கிட்டு முதல்வரிடம் காய் நகர்த்தி வருகிறார் ஜாபர்” என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜாபர் சேட் தரப்பினர், “லாபி செய்து பதவி பெறவேண்டிய அவசியம் ஜாபருக்கு இல்லை. கொடுத்தப் பதவியை செவ்வனே செய்வார்” என்று முடித்துக்கொண்டனர்.சபாஷ்... சரியான போட்டிதான்! குமுறலில் உளவுத்துறை!உளவுத்துறை ஐ.ஜி-யாக ஜாபர்சேட் இருந்தபோது, உளவுத்துறையில் பணிபுரிவோருக்கு அடிப்படை ஊதியத்தில் பத்து சதவிகிதத்தைப் போக்குவரத்துப் படியாகப் பெற்றுக் கொடுத்தார். பிறகு சிறப்பு படியும் கிடைத்து வந்தது. இந்தப் பணத்தில்தான் 'சோர்ஸ்'களையும் உளவுத்துறையினர் பேணி வந்தனர். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலான பிறகு, போக்குவரத்து படி 15 சதவிகிதத்தில் இருந்து எட்டு சதவிகிதமாகவும் சிறப்புப் படி 10 சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கைக்காசைப் போட்டு 'சோர்ஸ்'களைக் காத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை . இதனால், உறுதியான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக உளவுத்துறைக்குள் குமுறல் எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)