ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாகை: ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை அருகே மஞ்சக்கொல்லையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன், மாநில பொருளாளர் ரவி, தமிழ்நாடு ஊராட்சி செயலளார்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் ஊராட்சி செயலளார்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் ஏற்று பரிசீலனை செய்து ஊராட்சி செயலளார்களை சிறப்பு கால முறை ஊதியத்தில் இருந்து மாற்றம் செய்து காலமுறை ஊதியமமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)