வாக்கு சேகரிப்பில் மு.க. ஸ்டாலின்.!

வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறவுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக. சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடை வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி இன்று காலை உழவர் சந்தை வழியே நடைபயிற்சி செய்த அவர் அங்கிருந்த காய்கறி விற்பனை செய்வோர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)