குப்பைத்தொட்டியால் தொற்றுநோய் அபாயம் : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பெரியகுளம் புதுப்பாலம் செல்லும் வழியில் தென்கரை கிளை நூலகம் எதிரே குப்பை தொட்டி (பெட்டி) வைக்கப்பட்டுள்ளது. இக் குப்பைத்தொட்டியில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு , தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இக் குப்பைத்தொட்டி அமைந்துள்ள இடம் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக பகுதியாக இருந்தாலும், இவ்வணிக வளாகத்தில் இரண்டு உணவகங்கள்,DD 477 பெரியகுளம் கூட்டுறவு சங்க கட்டிடம், வழக்கறிஞர்கள் அலுவலகம், வணிக வளாகத்தின் எதிரே உணவகம் என பொதுமக்கள் உணவருந்தும் இடத்தின் அருகே குப்பைத்தொட்டி வைத்திருப்பதால் அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் பொது மக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. மேலும் அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் இவ்வழியில் சென்று வருவதால் அவர்களுக்கு எளிதில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தென்கரை கிளை நூலக வாசகர்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றதாகவும் தெரிவிக்கின்றனர். பெரியகுளம் நகரத்தின் தூய்மை காக்க வேண்டிய பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் , நோய் தொற்று ஏற்படுத் தும் வகையில் செயல்பட்டு வருவது வேதனையளிப்பதாக இப்பகுதியை கடந்து செல்லும், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், பாதசாரிகள், நூலக வாசகர்கள் , வணிக வளாகத்தில் கடை அமைத்து பயன்படுத் துவோர் என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இக்குப்பைத்தொட்டியை அகற்றி அரசு மதுபானக் கடை அருகிலோ, அல்லது பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறொரு இடத்திலோ வைத்து நகரின் தூய்மை காக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்