தி.மு.க-வில் இணைந்த வேலூர் ஞானசேகரன்

ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கு 100 அஃபிடவிட் இருந்தால் போதும். அதுதான் உங்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்து வாங்கிவிட்டீர்களே. என்னால் அப்படியெல்லாம் அனுப்ப முடியாது' எனக் கூறிவிட்டேன்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார் வேலூர் ஞானசேகரன். நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், தினகரனின் நடவடிக்கையால் ஸ்டாலினை நோக்கி வந்திருக்கிறார். அ.ம.மு.க-வில் பெயரளவில் அமைப்புச் செயலாளராக இருந்தேன். மாநிலம் முழுக்க அமைப்பே இல்லாத கட்சியில் நீடிப்பதைவிட தி.மு.கவோடு போராட்டக் களத்தில் இருப்பது மேல்' எனக் கொதிக்கிறார் ஞானசேகரன்.அ.ம.மு.க-வில் இருந்து விலக வேண்டிய அவசியம் ஏன் வந்தது?"தினகரனோடு இருந்தால் எதிர்காலம் இருக்கப் போவதில்லை. மக்கள் ஆதரவும் அவருக்கு இல்லை. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப் போட்டியிடச் சொன்னார். கட்சிக்கு அமைப்பே இல்லாததால் நான் நிற்க மாட்டேன்' எனக் கூறிவிட்டேன். அதற்காகக் கோபப்பட்ட தினகரன், வேலூரில் இருப்பவர்கள் கூட்டணியில்லாததால் நிற்கத் தயங்குகிறார்கள். புதிதாக உறுப்பினராகச் சேர்ந்தவருக்குக்கூட நான் சீட் கொடுப்பேன்' என்றார். நான் ஏதோ நெகட்டிவ்வாகப் பேசுவதாக நினைத்துவிட்டார். உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான். அந்தக் கட்சியைப் பிடிப்போம்' என்று சொன்னார் தினகரன். எதுவும் நடக்கவில்லை . சரி... இப்போதைக்குப் போராட்டக் களத்துக்கு வருவதற்குத் தகுதியான கட்சி எதுவென்று பார்த்தேன். ஆளும்கட்சிக்கு ஏராளமான எதிர்ப்புகள் இருக்கின்றன. அங்கு செல்வதில் எந்தப் பயனும் இல்லை . காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வோடுதான் கூட்டணிக்கு வர வேண்டும். மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேருவதைவிட தி.மு.க-வில் இணைவதே சிறந்தது என முடிவெடுத்தேன்".நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை மட்டுமே வைத்துக் கொண்டு, தினகரனை எடைபோடுவது சரியானதுதானா?" அவர்கள் பெற்ற தோல்வியை மட்டுமே நான் எடை போடவில்லை. கட்சிக்கு அமைப்பு இருக்கிறதா இல்லையா என்பது களத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். மக்கள் ஆதரவும் இருக்க வேண்டும்; அமைப்பும் இருக்க வேண்டும்".அ.ம.மு.க-வில் சேரும்போது அக்கட்சிக்கு அமைப்பு இல்லாததை நீங்கள் உணரவில்லையா?"அ.தி.மு.க அணியாக இருக்கும்போதுதான் நாங்கள் சென்றோம். அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கும்போது அதற்கான அழைப்பிதழைக்கூட எனக்குத் தரவில்லை. கட்சியில் அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கட்சியைப் பதிவு செய்வதற்கான வேலைகளைச் செய்தார்கள். அதன்பிறகு வாட்ஸ்அப்பில் தகவலை அனுப்பி, அஃபிடவிட்டை அனுப்புமாறு கூறினார்கள். யாரை ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?" எனப் பதில் அனுப்பினேன். ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கு 100 அஃபிடவிட் இருந்தால் போதும். அதுதான் உங்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்து வாங்கிவிட்டீர்களே. என்னால் அப்படியெல்லாம் அனுப்ப முடியாது' எனக் கூறிவிட்டேன்".உங்களை ஒரு காங்கிரஸ்காரராகத்தான் தொகுதி மக்கள் பார்க்கிறார்கள். அங்கு செல்லாமல் தி.மு.க-வை ஏன் தேர்வு செய்தீர்கள்?"தி.மு.க-வோடு கூட்டணியில் இணைந்ததால்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் எம்.பி ஆகியிருக்கிறார்கள். கூட்டணி என்றாலும் மதச்சார்பற்ற கொள்கை என்றாலும் இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். இதில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்குக் காங்கிரஸ் தீவிரமாகக் குரல் கொடுப்பதில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்ற பிரச்னை எழுந்தால், போராட்டத்துக்குக் காங்கிரஸ் வருவதில்லை. மாநிலப் பிரச்னைகளுக்காகக் காங்கிரஸ் கட்சி சரியான முறையில் குரல் கொடுப்பதில்லை . தமிழர் பிரச்னைகளைக் காக்கவும் தமிழ் மொழியைக் காக்கவும் தி.மு.க தான் சரியான இயக்கமாக இருக்கிறது."தி.மு.க-வில் இணைவதற்கு உங்களுக்கு ஏதேனும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட"திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கலைஞரோடு ப்பட்டவர் என்னுடைய மாமனார் முல்லை வடிவேல். அதேபோல், என்னுடைய சின்ன மாமனார் கல்லக்குடி தண்டவாளத்தில் கலைஞர் கருணாநிதியோடு ஒன்றாகத் தலைவைத்துப் படுத்தவர். அவரும் சரி...ஸ்டாலினும் சரி... எப்போதும் என் மீது பாசத்துடன் இருப்பார்கள். இன்று இருக்கக் கூடிய சூழலில் பலமுள்ள கட்சியாக மக்கள் போராட்டத்துக்குக் குரல் கொடுக்கக் கூடிய கட்சியாக தி.மு.க இருக்கிறது. நல்லாட்சியைக் கொடுக்கக் கூடிய தலைவராகவும் ஸ்டாலின் இருப்பார். அந்த வகையில் தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொண்டேன்". 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)