ஜாங்கிட், . ஐ.பி.எஸ, இன்று ஓய்வு

தமிழகத்தில் அட்டூழியம் செய்து வந்த, பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஜாங்கிட், இன்று(ஜூலை 31) ஓய்வு பெறுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், ஜாங்கிட், 60. ஐ.பி.எஸ்., அதிகாரியாக, 1985ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்டார். வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை இவர் ஒழித்தார். சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், 'பங்க்' குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்தார். தற்போது, டி.ஜி.பி., ரேங்கில், கும்பகோணம், போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், இன்று ஓய்வு பெறுகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)