இன்று விலகுகிறார் இசக்கி சுப்பையா.. அதிமுகவில் ஐக்கியமாகிறார்

சென்னை: அமமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும், இன்றைய நாளில் அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், மைக்கேல் ராயப்பன், போல அமமுகவின் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகிதான் இசக்கி சுப்பையா தினகரனிடம் நெருக்கமாக இருந்தவர். அமமுகவின் "தேவைகளை" குறைவின்றி பூர்த்தி செய்து வந்தனர். 18 எம்எல்ஏக்கள் வழக்கு, குக்கர், தொப்பி போன்றவைகளில் வராத பிரச்சனை சீட் ஒதுக்கீட்டின்போது எழ ஆரம்பித்தது திருநெல்வேலியை இசக்கி கேட்க, தினகரனோ தென்சென்னையை வற்புறுத்தி திணிக்க.. இதில் இசக்கி தோல்வியை தழுவ. இங்குதான் விரிசல் வேகமாகவும், மிக ஆழமாகவும் விழுந்தது. இதையடுத்து, அமமுகவின் கூட்டங்களில் பெரிசாக இசக்கி தலைகாட்டவில்லை. திடுதிப்பென்று தனது ஆதரவாளர்களை கூப்பிட்டு கொண்டு குற்றாலத்தில் கூட்டம் போட்டார். அப்போதே தினகரனுக்கு எரிச்சல் + எச்சரிக்கையை தந்தது. இதே சமயம் அதிமுகவும் குஷியாகி விட்டது. ஒரு பக்கம் அதிமுகவில் சேர போகிறார் என்ற தகவல்கள் கசிந்தாலும், செந்தில்பாலாஜியும், இசக்கியை திமுக பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது இந்த சூழலில்தான் நேற்று அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று தகவல் பறந்தன. இதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அமமுகவில் இருந்து விலகுவதுடன், அதிமுகவிலும் தன்னை இணைத்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)