இரங்கல், புகழஞ்சலி மற்றும் திருமதி வி.தனம் அம்மா திருவுருவப்படம் திறப்பு
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து, மக்கள் செய்தி மையம் இயக்குனர், மற்றும் சென்னை பத்திரிகையாளர் யூனியன், தலைவர் மூத்த பத்திரிகையாளர் பாசமிகு அண்ணன் திரு வி.அன்பழகன், அவர்களுடைய தாயார் திருமதி வி.தனம் அம்மா அவர்களின் இரங்கல் புகழஞ்சலி மற்றும் திரு உருவ படம் திறப்பு நடைபெற்றது இதில் தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI), தலைவர் மு.திவான் மைதீன், மாநில பொருளாளர் எஸ் மாரியப்பன், திருவுருவப்படம் திறப்பு புகழ் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தும் , இதில் அனைத்து யூனியன் தலைவர்களும், சங்கங்களில் தலைவர்களும் சங்கமித்த, பத்திரிகையாளர் மன்றத்தில், அனைத்து பத்திரிகை ஆசிரியர்களும், மூத்த பத்திரிகையாளர்களும், இளம் செய்தியாளர்களும், சமூக ஆர்வலர்களும், தாயாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பு, துன்பத்தில் துடிக்கும்போது துயர்துடைக்கும் தோழனாகவும், நடக்கும்போது உடன் நடக்கும் நண்பனாகவும் தடுமாறும் போது வழிகாட்டும் தாயாகவும், நம்மை விட்டு பிரிந்து சென்ற போதிலும் உடனிருந்து உள்ளத்தையும் உணர்வுகளையும் மேலிருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் அம்மா அவர்கள். அண்ணன் அன்பு அம்மா அவர்கள் நம் விழிகளில் வெளிச்சத்தில் ஆலைகளை ஏற்றியிருக்கிறது நாம் அம்மா முகம் ஒளிரும், அகமும் குளிரும், அண்ணன் அன்பு உங்களை பாறை போல் இறுகி இருக்கும், உங்களை பஞ்சு போல் மென்மையாக்கும், உங்களை ஒரு பத்திரிகையாளராகவும், வலிமைமிக்க போர்வாள் பத்திரிக்கையாளராக ஈன்றெடுத்த தாய்க்கு வீரவணக்கம். அம்மா அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு அண்ணன் அன்பு அவர்களின் நிகழ்வு மற்றும் பத்திரிகையில் உள்ள திறமைகளையும் அவர் கையாண்ட விதங்களையும் குறித்து மற்ற செய்தியாளருக்கு எடுத்துரைத்து தாயாரின் இறப்பு ஈடு அமையாத தாகவும் கூறி ஐந்து நிமிடம் மௌன அஞ்சலியுடன் நினைவஞ்சலி நிறைவடைந்தது பின்பு கடைசியாக அண்ணன் அன்பு அவர்கள் அனைவருக்கும் உணவு படைத்து நிகழ்வு இனிதே நிறைவுற்றது.