உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் மொழிப்பெயர்க்க முடிவு

புதுடெல்லி2ம் கட்ட பட்டியலில் முன்னுரிமை என தகவல் : உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்புகளை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2வது கட்ட பட்டிய லில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் ஆங்கிலம் அல்லது நாட்டின் அதிகாரப்பூர்வ அலு வல் மொழிகளில் மட்டும் தான் வழக்கின் தீர்ப்புகளை வழங்கி வருகின்றது. இதில் குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலம் தவிர நீதிமன்ற தீர்ப்புகள் அதிகம் வழங் கப்படுவது கிடையாது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ வலைதளபக்கத் தில் இனி வரும் வழக்கின் தீர்ப்பு களை இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் வெளியிட உள்ள தாக தெரிவித்துள்ளது. அதன்படி, மொழிப்பெயர்க் கப்பட்ட தீர்ப்புகளை உச்ச நீதி மன்றத்தின் “இன் ஹவுஸ்” மின் னணு மென்பொருள் பக்கத்தில் பதிவு செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதியும் வழங்கியுள்ளார். இந்த திட்டத்து தின்படி வழக்கின் தீர்ப்புகள் அனைத்தும் குறைந்த பட்சம் 10 நாட்களுக்குள் 6 மொழிகளிலும் வெளியிடப்படும். இதில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் கொச்சியில் நடந்த சட்ட வல்லு நர்களின் மாநாட்டில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பிராந்திய மொழிகளில் தீர்ப்பு வெளியிடுவதன் அவசியம் பற்றி பேசினார். அதனை சுட்டிக் காட்டி, தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்பு வெளியிடும் நடைமுறைக்குப் பதிலாக பிராந் திய மொழிகளிலும் வெளியிடப்ப டும் என தெரிவிக்கப்பட்டு இருந் தது. திட்டத்து இருப்பினும் தென் இந் தியாவை பொருத்த மட்டில் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இந்திதெலுங்கு உள்ளிட்ட மொழிக ளில் வெளியானாலும் தமிழ் மொழியில் தீர்ப்புகளை பெறமுடி யாத நிலைமை உள்ளது. இதனால் இந்தியை திணிக்க முயலும் பா.ஜ அரசை போல தமிழ் மொழியை யும் நீதிமன்றம் புறக்கணிக்க முடி வுசெய்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தின் தரப்பில் இருந்து தற் போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில்,” முதல் கட்டமாக எடுக்கப்பட்ட முடிவுகளில் வழக்கின் தீர்ப்பு களை இந்தி, தெலுங்கு, அசாமிகன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் வெளியிட உள்ள தாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிகப்படியான வழக்குகளை மேல்முறையீடு செய்யப்படுவ தால் தமிழையும் இணைக்ககோரி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக் கப்படுகிறது. இதனால் இனிவரும் காலக்கட்டங்களில் உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க முடிவு செய்ய உள்ளதாகவும், இதற்கான அதிகா ரப்பூர்வ அறிவிப்பை 2வது கட்ட பட்டியலின் போது வெளியிடப்ப டும் என குறிப்பிடப்பட்டுள்ளதுஇது தமிழுக்கு கிடைத்த மிகப்பெ ரிய வெற்றியாகவும் வரலாற்று சாதனையாகவும் தற்போது கரு தப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)