'மக்களவையில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு செயலாளர் டி. முஹம்மது பஷீர் பேச்சு

" புதுடெல்லி, ஜூலை. 03திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அரசியல் தலையீட்டிலிருந்து உயர் க ல் வி த் து ைற யை காப்பாற்ற வேண்டும் எனவும் மக்களவையில் இ.யூ முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு செயலாளர் இடி முஹம்மது பஷீர் நேற்று முன்தினம் (01-07-2019) பேசினார். மக்களவையில் (07-072019) அன்று மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது. இது 41 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 7000 பணியிடங்களை நிரப்ப உதவும். ) இந்த மசோதா குறித்து இடி முஹம்மது பஷீர் பேசியதாவது: . மாண்புமிகு சபாநாயகர் 5 அவர்களே! இங்கு பேச வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவில் அடங்கியுள்ள சரத்துக்கள் அனைத்தும் என்னைப் பொறுத்தமட்டில் " சரியானவை. கல்வித்துறையில் தாழ்த் தப்பட்டவகுப்பினர்தாழ்த்தப் பட்ட பழங்குடியினர்கள் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றுவதன் மூலம் தேசிய கல்வி நிறுவனங்களில் பணி நியமன முறையை ஒழுங்குபடுத்த இது உதவும். இந்த சரத்து நன்மையானது. ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து எனக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன. நீதிமன்றங்களில் இந்த சரத்து வெற்றி பெறாது என்று நினைக்கிறேன். இந்த விவகாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று = நான் விரும்புகின்றேன். துறையை ஒரு யூனிட்டாக கருதிஉச்சநீதிமன்றத்தால் ஏற்பட்ட தடையை நீக்க இது அரசுக்கு உதவியாக இருக்கும். அந்த , தடையை நீக்க முடியும். " மேலும் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மசோதா பணிநியமனத்தில் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், அரசு இதை எப்படி செயல் படுத்த போகிறது? இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அரசின் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக் கைகளால் நாட்டில் பணி நியமனத்தில் குறிப்பாக உயர்கல்வி துறையில் முழு அளவில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட நான் தயங்க வில்லை . ஐஐடி, ஐஐஎம். மதிய பலலைகலைக் கழகங் கள், பல்கலைக்கழக மானியக் குழு, என்சிஇஆர்டி போன்ற 2. சில கல்வி நிறுவனங்களில் மட்டும் தலைவர்களை நியமிப்பதில் நீங்கள் 2 29 சசியததுவம் அளிப்பது இல்லை. வேறு சில தகுதிகள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அரசியல் தலை வீட்டிலிருந்து உயர்கல்வியை காக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திறமைக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டும். ஆனால் தூர்திஷ்டவசமாக இது நடைபெறவில்லை, தற்போதைய சூழ்நிலையை உற்று நோக்கும் போது, எந்த ஒரு கல்வி நிறுவனத்தையோ அல்லது தனிநபரையோ குறைகூற நான் விரும்பவில்லை. ஆளுங்கட்சியினருக்கு இவர்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறார்களா அல்லது இல்லையா என்பது தான் தகுதியாக கருதப்படுகிறது. இதுதான் நிலை என்றால் கல்வித்துறையை நீங்கள் பாதைக்கு ஆபத்தான அழைத்து செல்கிறீர்கள். அலிகர் பல்கலைக் கழகத்திற்கு மண்டல மையங் களை அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்திருந்தது மாண்புமிகு அமைச்சருக்கு தெரியும். இது சிறு பான்மையினர் நலனுக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த சிறந்த நடவடிக்கை . கேரளாவில் உள்ள பொரிந்தாள் மன்னா, பீகார், கிசன் கஞ்ச் மற்றும் மேற்கு வங்காளத்தில் முர்சிதாபாத் ஆகிய கல்வி நிறுவனங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி நிறுவனங்கள் மரணப் படுக்கையில் இருக்கின்றன. இங்கு நீங்கள் பணிநியமனம் எதுவும் செய்வதில்லை . நிதி ஒதுக்கீடு எதற்கும் அனுமதி அளிப்பதில்லை. இந்த கல்வி நிறுவனங்கள் மரண நிலையில் உள்ளன. இந்த விவகாரத்தில் தாராளத் தன்மையை கடைபிடிக்கும் படி மத்திய அரசையும் மற்றும் மாண்புமிகு அமைச்சரையும் நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுபான்மை யினர்கள், இதர பிற்படுத்தப் பட்டவர்கள் மற்றும் மற்றவர்களை குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். | சிறுபான்மையினரின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அரசு எடுத்திருந்த மிக முக்கியமான நடவடிக்கை . ஆனால், நீங்களோ இந்த கல்வி நிறுவனங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். ) புதிய மத்திய பல்கலைக் கழகங்களில் 53 23 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாகவும் ஐஐடிக்களில் ஆசிரியர் பணியிடங்கள் 47 சதவீதம் காலியாக உள்ளதாகவும் மாண்புமிகு அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும்போது பல்கலைக்கழகம் நிலையில் எவ்வாறு மாற்றம் ஏற்படும்? | மேலும் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி எனது உரையை முடிக்க விரும்புகிறேன். உயர்கல்வி நிறுவனங் களில் மட்டுமின்றி கல்வித் துறையிலேயே சீர் திருத்தங்களை கொண்டுவர நீங்கள் முயற்சிக்கிறீர்கள். இந்த வகையில், கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை இப்போது விவாதத்தில் உள்ளது. நீங்கள் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறீர்கள். இது 500 பக்க அ இது கல்வியின் அடித் தளத்தையே மாற்றியமைக்கும், குழு கஸ்தூரிரங்கன் அறிக்கை தொடர்பான மிக ஆழமான விவாதங்கள் நடத்தப்படவேண்டும். இது தொடர்பாக சம்பந் தப்பட்டவர்களின் கருத் துக்களை சமர்ப்பிக்க மாண் புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு மாதகால அவகாசம் மட்டுமே வழங்கியுள்ளார்கள். இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இருப்பதால், இதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப் படவேண்டும். நானும் கேரளாவில் கல்வி அமைச்சராக இருந்திருக் கிறேன், கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை படித்துப் பார்க்கும்போது இதனை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும். எனவே, சம்பந்தப் பட்டவர்களுக்கு அவர் களது மதிப்புமிகு ஆலோ சனைகளை தெரிவிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)