போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வீட்டிற்கே அபராத தொகை ரசீதை காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர். 

சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வீட்டிற்கே அபராத தொகை ரசீதை காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.  போக்குவரத்து விதிமீறல்களில் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. ஹெல்மட் அணிவது கட்டாயமக்கபட்ட நிலையில், உரிய வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிமன்றம் சாடியது. மேலும், ஹெல்மெட் அணியாமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரின் மீது உரிய நடவடிக்கை எக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.                       அதனையடுத்து, போக்குவரத்து போலீசார் தங்களது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைவருக்கும் அபராதம் விதித்தனர். வாகனத்தில் இருவர் பயணக்கும் பட்சத்தில் ஒருவர் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.                  இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வீட்டிற்கே அபராத தொகை ரசீதை காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவெண்ணை படம் பிடிக்கும் நவீன கண்காணிப்புக் கேமரா அண்ணா நகரில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான வாகனங்களின் பதிவெண் மூலம் உரிமையாளரின் முகவரியை கண்டறிந்து அபராத தொகைக்கான ரசீதை காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)