தர்ணா நடத்திய பிரியங்கா: கைது செய்த போலீஸ்

லக்னோ : உ.பி.,யில் சோனிபத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பார்க்க சென்ற காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அவர், அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை போலீசார் மறுத்துள்ளனர்.உ.பி.,யின் சோனிபத்ரா பகுதியில் சமீபத்தில் நிலத்தகராறு தொடர்பாக இருதரப்பினரிடையே நடந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் வரை பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு 144 தடை அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா இன்று உ.பி., சென்றார்144 தடை போடப்பட்டுள்ளதால், அங்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற பிரியங்காவை மிர்சாபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தன்னை அனுமதிக்கும்படி போலீசாருடன் பிரியங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருந்தும் போலீசார் அனுமதி அளிக்காததால், நாராயண்பூர் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து பிரியங்கா தர்ணா செய்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இதை போலீசார் மறுத்துள்ளனர்..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)