பத்திரிக்கையாளர் நலன் காக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான்

சென்னை : பத்திரிக்கையாளர் நலன் காக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜுபெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டமன்றப் பேரவையில், செய்தி மக்கள்தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்களுக்கு அளித்த பதிலுரை: தமிழ்நாட்டில் தமிழ்மொழி காத்த பேராசியர்களை,விடுதலைப்போராட்ட வீரர்களை, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை பெருமைப்படுத்தி அவர்களுக்கு நினைவில்லங்கள், அரசு விழாக்கள், சிலைகள் அமைத்து பெருமைப்படுத்திய,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாதஒருமுதலமைச்சராக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவர் அவர்கள் காலத்தில் தான் எட்டையபுரத்தில் புரட்சிக்கவிஞர் பாரதியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டு, மணிமண்டபம் அமைக்கப்பட்டுசிறப்பு சேர்க்கப்பட்டது. அதற்குப் பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒட்டப்பிடாரத்திலே வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழாக்கள் சீரோடும்,சிறப்போடும் நடைபெறுகிறதுஇதே சட்டமன்றத்தில், கயத்தாரில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதலில் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கச்சொல்லி நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் கோரிக்கை வைத்தபோது, நான் அமர்வதற்கு முன்பாகவே உடனடியாக பதிலை சொன்னதோடு மட்டுமல்லாமல்பிரம்மாண்டமான வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை அமைத்தார்கள். பத்திரிகையாளர் நலன் காக்கும் அரசு பத்திரிகையாளர் நலனில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கலாம். ஆனால், 2011ஆம் ஆண்டு வரைபத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூபாய் 5 ஆயிரமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் இருந்ததைமாண்புமிகு அம்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டிலிருந்த படிப்படியாக ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி, சென்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலே முதலமைச்சர் எடப்பாடியார் ரூபாய் ஆயிரமாக உயர்த்திவழங்கினார்கள் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அதேபோல, பத்திரிகையாளர் நலன் காக்கின்ற அரசாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு இருக்கின்றது. திராவிடமுன்னேற்றக்கழக உறுப்பினர் பத்திரிகையாளர்களின் குறையை நீக்கினோம் என்று சொல்கிறார். ஆனால், காலம், காலமாக, தலைநகர் புது டெல்லியில் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு இதுவரை செய்தியாளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. நான் 2016ல் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் செய்தித்துறை அமைச்சரானபொழுதுமுதன்முதலில் புதுடெல்லி சென்ற நேரத்தில், “நாங்கள் புதுடெல்லியில் அநாதைகளாக இருக்கின்றோம். எங்களுக்கு அடையாள அட்டை இல்லை, நாங்கள் பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிக்க செல்லும்பொழுது பாராளுமன்றவளாகத்தின் வெளியில் புல்வெளியில் அமர்ந்து செய்திசேகரித்து அனுப்புகின்றோம்” என்று சொன்ன நேரத்திலே, அதை முதலமைச்சர் எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்துச் சென்ற நேரத்திலே உடனடியாக ஆணையிட்டு,ஒரேவாரகாலத்திற்குள் தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்கியதோடு மட்டுமல்லாமல், ஒருவிழாவைஏற்பாடு செய்து, அந்த விழாவிற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை என்னுடன் அனுப்பி பழைய விருந்தினர் இல்லத்திலே குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய பத்திரிகையாளர் அறை அமைக்கப்பட்டது. ஆகவே, எந்த வகையிலும் பத்திரிகையாளர்களின் நலன் காக்கின்ற அரசுபுரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்