பாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9மாதத்தில் முடிக்க உத்தரவு

புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, 9 மாதங்களில் முடிக்கும் படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கடந்த, 1992ல், இங்குள்ள அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப் பட்டது.இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்துவிசாரணை, லக்னோ, சி.பி.ஐ., சிறப்பு நீதி மன்றத்தில் நடக்கிறது.இந்த வழக்கின் விசாரணையை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கும்படி, 2017 ஏப்ரலில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, மேலும் ஆறு மாதம் அவகாசம் அளிக்கும்படி,சிறப்பு நீதி மன்றம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எப். நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை, 9 மாதங்களுக்குள் முடிக்கும் படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் பதவிக் காலம், செப்டம்பருடன் முடிவடைவதால், அதை நீட்டிக்க, போதிய நடவடிக்கை எடுக்கும்படி, உ.பி., மாநில அரசுக்கும் உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)