முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்
மருத்துவப் படிப்புகளில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்மருத்துவப் கீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவைக்கூட்டம்பிற்பகலில் நிறைவடைந்த பிறகு, மாலை 5.30 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதனை இப்போது நடைபெறவுள்ள கான கலந்தாய்விலேயே கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டியுள்ளார். சட்டப் பேரவையில் இதுதொடர்பான பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன் வைத்தார். அப்போது, இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவை யிலேயே ஏற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் .இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசியல் கட்சிப் பிரதி நிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாநிலத்திலுள்ள முக்கியமான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒருமனதாக எடுக்கப்படும் முடிவுகளை முதல்வர் பழனிசாமி அறிவிக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மருத்துவக் கல்வி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு, பொதுப் பிரிவு, 69 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன, மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள், 25 சதவீதம் மருத்துவக் கல்வி கல்வி இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு கர்நாடகம், தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரி வித்துள்ளன. 25 சதவீத மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரித்தாலும், நமது மாநிலத்திலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, இதுபோன்ற அம்சங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தின் மூலமாக, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளும் போதுஎம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடங்கள் சிறிது அதிகரிக்கப்படலாம். இந்திய மருத்துவக் கவுன்சிலின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இப்போதுள்ள இடங்களின் அடிப்படை யிலேயே கலந்தாய்வு நடைபெறும்.