வெளியே போங்க' - மாணவனின் பெற்றோரை விரட்டிய கோவை அரசுப்பள்ளி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் தன் மகன் ஸ்ரீராமை அந்தப் பள்ளியில் சேர்க்க வந்துள்ளார். ஸ்ரீராம் கண்ணம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். ஆனால், ஸ்ரீராமை தங்களது பள்ளியில் சேர்க்க முடியாது என்று பள்ளியின் தலைமையாசிரியர். ரவிச்சந்திரன் மறுத்துள்ளார். இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை, கணேஷ்பாபு தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்க பையனை இங்கு சேர்க்க முடியாது. உங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஏதாவது ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க. வெளியே போங்க” என்று சிவக்குமார் ஆவேசமாகக் கூறியுள்ளார். அப்போது கணேஷ்பாபுவின் செல்போனை ரவிச்சந்திரன் தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.இந்நிலையில், ஸ்ரீராமின் மாற்றுச் சான்றிதழில் பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம் என்றிருந்ததாகவும், அவரை மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றும் கணேஷ்பாபு கேட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பள்ளி இடைநிறுத்தத்துக்கான காரணத்தை முறையாகக் கூறாததால், ஸ்ரீராமை பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளதாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து பள்ளி உதவித் தலைமையாசிரியர் சிவக்குமார், விதிமுறைகளின்படி ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓர் மாணவனை மீண்டும் அதே வகுப்பில் சேர்க்க முடியாது. அதற்கு மட்டும்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அந்த மாணவனை பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனிடையே ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் அவதூறாகப் பேசி அடித்ததாகக் கணேஷ்பாபு, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)