முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும்

புதுச்சேரி: தமிழகத்தின் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகி ராமனுக்கு சிலை வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், புதுச்சேரியில் நீர்வளத்தை பாதுகாக்க நீர் மேலாண்மைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நீர் மேலாண்மைக்காக மத்திய அரசிடம் ரூ 2,000 கோடி நிதி பெற திட்டம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ் உட்பட மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்