கவன ஈர்ப்பு தீர்மானம்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

சட்டப்பேரவையில் இன்று (01.07.2019), குடிநீர் பிரச்சனை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுகவின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பதிலுரை: "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12524 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இங்குள்ள மக்களுக்குத் தேவையான பாதுகாப்பான குடிநீரை தடையின்றி வழங்கிட வேண்டும் என்பதே அரசின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தக் குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில், மொத்தம் 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் திட்டப் பணிகளை நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார். தமிழக மக்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்கிட 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை கோயம்புத்தூர் (பில்லூர்-2), மதுரை விரிவாக்க பகுதி, திருமங்கலம், மேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், காயல்பட்டினம், கடையநல்லூர், மேட்டூர், பல்லடம், சிதம்பரம், வெள்ளக்கோவில், காங்கேயம், வந்தவாசி, காரைக்குடி, தாராபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், பெரியகுளம், திருவத்திபுரம், திருச்சிராப்பள்ளி, தேவகோட்டை இடைப்பாடி, குன்னூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், பள்ளிபாளையம், வேலூர் மாநகராட்சி மற்றும் 11 நகராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, கூடுதலான குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, குடிநீர் திட்டப் பணிகளுக்கு தந்த அதே முக்கியத்துவத்தை, முதல்வரும் தொடர்ந்து தந்து செயல்படுத்தி வருகின்றார். 2016-ம் ஆண்டில், ஜெயலலிதா, மகத்தான வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாம் முறை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று, 2016-17ஆம் ஆண்டிலும், அதைத் தொடர்ந்து, பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று, கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டிலும், ஆக கடந்த 3 ஆண்டு காலத்தில், குடிநீர்த் | திட்டப் பணிகளுக்காக, 15,854 கோடியே 44 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதன் மூலம், அனைத்து உள்ளாட்சிகளிலும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2016 முதல் 2019 வரையிலான 3 ஆண்டு காலத்தில், அரசு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், 2,475 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 4,091 குடிநீர்ப் பணிகளும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 5,890 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில், 7,249 குடிநீர்ப் பணிகளும், பேரூராட்சிகளில், 196 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பில், 3,924 குடிநீர்ப் பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 3,593 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில், 49 குடிநீர் திட்டப் பணிகளும், ஊரகப் பகுதிகளில், 1,928 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 171 குடிநீர்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் - 18 பெரிய குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.6,496 கோடியில் நடைபெற்று வருகின்றன” இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் பதிலளித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)