பத்திரிகையாளர்களின் நலன் காக்கிற அரசு ஜெயலலிதா அரசு: கடம்பூர் ராஜூ பெருமிதம்

பத்திரிகையாளர்களின் நலன் காக்கிற அரசு ஜெயலலிதா அரசு என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பெருமிதத்துடன் தெரிவித்தார். சட்டமன்றப் பேரவையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவிக்கு அவர்களுக்கு அளித்த பதிலுரை வருமாறு:- தமிழ்நாட்டில் தமிழ் மொழி காத்த பேராசியர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை பெருமைப்படுத்தி அவர்களுக்கு நினைவில்லங்கள், அரசு விழாக்கள், சிலைகள் அமைத்து பெருமைப்படுத்திய, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரு முதலமைச்சராக இருந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். காலத்தில் தான் எட்டையபுரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டு, மணிமண்டபம் அமைக்கப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா ஒட்டப்பிடாரத்திலே வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் - ஆண்டுதோறும் அரசு விழாக்கள் - சீரோடும், சிறப்போடும் நடைபெறுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதலில் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கச் சொல்லி நான் அம்மாவிடம் கோரிக்கை வைத்தபோது, நான் அமர்வதற்கு முன்பாகவே உடனடியாக பதிலை சொன்னதோ சொன்னதோடு மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை அமைத்தார். பத்திரிகையாளர் நலனில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது தி.மு.க.வாக இருக்கலாம். ஆனால், 2011-ம் ஆண்டு வரை பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூபாய் 5 ஆயிரமாக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததை, அம்மா 2011ம் ஆண்டிலிருந்த படிப்படியாக ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி, சென்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அதேபோல், பத்திரிகையாளர் நலன் காக்கின்ற அரசாக அம்மா அரசு இருக்கின்றது. தி.மு.க. உறுப்பினர் பத்திரிகையாளர்களின் குறையை நீக்கினோம் என்று சொல்கிறார். ஆனால், காலம், காலமாக, தலைநகர் புதுடெல்லியில் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு இதுவரை செய்தியாளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. நான் 2016ல் அம்மாவால் நான் செய்தித் துறை அமைச்சரானபொழுது, முதன்முதலில் புதுடெல்லி சென்ற நேரத்தில், "நாங்கள் புதுடெல்லியில் அநாதைகளாக இருக்கின்றோம்; எங்களுக்கு அடையாள அட்டை இல்லை. நாங்கள் பாராளுமன்றக் இல்லை, நாங்கள் பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிக்க செல்லும்பொழுது பாராளுமன்ற வளாகத்தின் வெளியில் புல் வெளியில் அமர்ந்து செய்தி சேகரித்து அனுப்புகின்றோம்" என்று சொன்ன நேரத்திலே, அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச் சென்ற நேரத்திலே உடனடியாக ஆணையிட்டு, ஒரே வாரகாலத்திற்குள் தலைநகர் டெல்லியிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்கியதோடு மட்டுமல்லாமல், ஒரு விழாவை ஏற்பாடு செய்து, அந்த விழாவிற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை என்னுடன் அனுப்பி பழைய விருந்தினர் இல்லத்திலே குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி போன்ற அனைத்து வசதிகளுடன் பத்திரிகையாளர் கூடிய அமைக்கப்பட்டது. அறை எந்தவகையிலும் ஆகவே, நலன் பத்திரிகையாளர்களின் காக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)